சன் டிவியில் ஒளிபரப்பான தெய்வமகள் சீரியலில் நடித்து சின்னத்திரையில் அறிமுகமானவர் நடிகை நிவிஷா. இதனை அடுத்து சிவகாமி, ஓவியா, முள்ளும் மலரும் உள்ளிட்ட சீரியல்களில் நடித்திருக்கிறார்.
தற்போது சன் டிவியில் ஒளிபரப்பாகும் மலர் சீரியலில் இரண்டாவது ஹீரோயின் ரோலில் நடித்தார். இந்த சீரியல் மூலம் நிவிஷாவிற்கு மிகப்பெரிய அங்கீகாரம் கிடைத்தது. ஆனால் சில தனிப்பட்ட காரணத்தால் இவர் இந்த சீரியலில் இருந்து விலகிவிட்டார்.
மருத்துவமனையில் அனுமதி
சமூக வலைத்தளங்களில் ஆக்ட்டிவாக இருக்கும் நிவிஷா அடிக்கடி புகைப்படங்களை பதிவிட்டு வருவதை வழக்கமாக வைத்துள்ளார்.
இந்நிலையில் நிவிஷா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், “கடந்த சில நாட்களாக உடல்நலக்குறைவால் இருக்கிறேன். அதனால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தேன். தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகின்றேன். விரைவில் உங்களை சந்திப்பேன்” என்று நிவிஷா பதிவிட்டுள்ளார்.