சமந்தாவை கடுப்படித்த ஹீரோ 

480
1
ஷூட்டிங்கிலிருந்து லீவு எடுக்க முயன்றதை தடுத்த ஹீரோ மீது கடுப்பானார் சமந்தா. டோலிவுட் ஹீரோ ஜூனியர் என்டிஆருடன் ஏற்கனவே 2 படங்களில் ஜோடியாக நடித்த சமந்தா தற்போது ரபஹாஸா என்ற படத்தில் அவருடன் நடித்து வருகிறார். சொந்த விஷயம் காரணமாக சமந்தா 3 நாள் விடுமுறை வேண்டும் என்று பட இயக்குனரிடம் கேட்டார். அதற்கு அவர் சம்மதம் தெரிவித்தார். இதை கேள்விப்பட்ட ஹீரோ ஜூனியர் என்டிஆர் கோபம் அடைந்தாராம்.இந்நிலையில் பட இயக்குனர் சமந்தா¬வை தொடர்புகொண்டு படம் முடிவடையும் தருவாயில் லீவு தர முடியாது.
ஷூட்டிங்கிற்கு வந்துவிடுங்கள் என்றார் . இதையறிந்து சமந்தா கோபம் அடைந்தார். தனது விடுமுறை ரத்தானதற்கு காரணம் ஜூனியர் என்டிஆர்தான் என சகதோழிகளிடம் சொல்லி வருத்தப்படுகிறாராம். இந்நிலையில் வரும் 17ம் தேதி நடக்கும் அஞ்சான் பட ஆடியோ நிகழ்ச்சியில் சமந்தா பங்கேற்பாரா என்ற கேள்வி எழுந்துள்ளது

 

SHARE