சமுத்திரக்கனிக்கு ஷாக் கொடுத்த அமலாபால்

737
சமுத்திரக்கனி இயக்கத்தில் ஜெயம் ரவி, அமலாபால் ஜோடியாக நடித்த படம் நிமிர்ந்து நில்.
இந்த படத்திற்கு பிறகு ஒரு புதிய படத்தை தானே நடித்து, இயக்கபோவதாக சமுத்திரக்கனி கூறியிருந்தார். மேலும் இந்த படத்தில் நாயகியாக அமலாபால் நடிக்க இருக்கிறார் என்றும் தெரிவித்திருந்தார்.

சமீபத்தில் இந்த படத்தில் வரும் ஒரு காட்சிகளுக்காக அமலாபால் ஆடு மேய்ப்பதை கூட கற்று வந்திருந்தார். இந்நிலையில் தற்போது சமுத்திரக்கனிக்கு அதிர்ச்சி தரும் வகையில் ஒரு போன் கால் வந்ததாம்.

போன் கால்னு சொன்ன உடனே உங்களுக்கு நான் என்ன சொல்ல வர்றேனு தெரிஞ்சிருக்குமே, அதாங்க நம்ம அமலாபால் போன்கால்.

நடிச்சிட்டு இருக்கும் போது கல்யாணம் பிக்ஸ் ஆயிடுச்சுனா எல்லா ஹீரோயினும் அடிக்கிற அதே டைலாக்க, அமலாபாலும் சொல்லிட்டு வராங்களாம்.

திருமணத்திற்கு பிறகு நான் கண்டிப்பா நடிக்க மாட்டேன், அதனால் நீங்க யாரையாவது வெச்சு நடிக்க வைச்சுக்கோங்க என்றாராம்.

SHARE