சம்சாரம் அது மின்சாரம் படத்தில் நடித்த இந்த பையனை நினைவு இருக்கா.. இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க

87

 

தமிழ் சினிமாவில் ஆகச்சிறந்த இயக்குனர் மற்றும் நடிகர்களில் ஒருவர் விசு. இவர் இயக்கத்தில் வெளிவந்த மணல் கயிறு, சம்சாரம் அது மின்சாரம், அவள் சுமங்கலிதான் போன்ற பல திரைப்படங்கள் இன்றும் நம் மனதை விட்டு நீங்கா இடத்தை பிடித்துள்ளது.

ஹாஜா ஷெரீப்
விசு என்று சொன்னாலே அனைவரும் முதலில் நினைவுக்கு வரும் திரைப்படம் என்றால் அது சம்சாரம் அது மின்சாரம் படம் தான். இப்படத்தில் விசுவின் கடைசி மகனாக நடித்திருந்தவர் நடிகர் ஹாஜா ஷெரீப். இவர் சம்சாரம் அது மின்சாரம் படம் மட்டுமின்றி மற்றும் சில திரைப்படங்களிலும் நடித்துள்ளார்.

குழந்தை நட்சத்திரமாக நடித்து வந்த இவர், இதன்பின் இளம் வயது நபராக அஜித்தின் சிட்டிசன் திரைப்படத்திலும் ஒரு சிறிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். ஆனால், இவருடைய நடிப்புக்கு நல்ல தீனி போடும் அளவிற்கு பட வாய்ப்புகள் அமையவில்லை.

சமீபத்திய புகைப்படம்
இந்நிலையில், நடிகர் ஹாஜா ஷெரீப் சமீபத்திய புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. இதை பார்த்த பலரும், சம்சாரம் அது மின்சாரம் படத்தில் நடித்த பையனா இது என ஷாக்காகி கேட்டு வருகிறார்கள்.

SHARE