சம்சுங்கின் புத்தம் புதிய Galaxy C9 கைப்பேசி தொடர்பாக வெளியான தகவல்கள்

298

உலகின் முன்னணி கைப்பேசி வடிவமைப்பு நிறுவனமான அப்பிளிற்கு நேரடி போட்டியாக திகழ்வது சம்சுங் நிறுவனம் என்பது அனைவரும் அறிந்ததே.

இவ்வாறிருக்கையில் அப்பிள் நிறுவனத்தினைக் காட்டிலும் அதிகளவு ஸ்மார்ட் கைப்பேசி வகைகளை வருடம் தோறும் அறிமுகம் செய்கின்றது சம்சுங்.

இம் முயற்சியின் தொடர்ச்சியாக Samsung Galaxy C9 எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இக் கைப்பேசியானது 5.2 அங்குல அளவுடையதும், 1080 Pixel Resolution உடையதுமான தொடுதிரையினைக் கொண்டுள்ளது.

அத்துடன் Qualcomm Snapdragon 617 Processor, பிரதான நினைவகமாக 4GB RAM மற்றும் 32GB சேமிப்பு நினைவகம் என்பவற்றினைக் கொண்டுள்ளது.

எனினும் இக் கைப்பேசியின் விலை உட்பட ஏனைய சிறப்பம்சங்கள் இதுவரை வெளியிடப்படவில்லை.

இதேவேளை இக் கைப்பேசியானது முதன் முறையாக சீனாவில் மட்டுமே அறிமுகம் செய்யப்படவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

SHARE