சம்பள வித்தியாசத்தை மனதில் வைத்து ஹீரோயின்களுக்குள் மோதல் போக்கு கடைபிடிக்கக்கூடாது என்றார் தீபிகா படுகோன். ‘கோச்சடையான்’ படத்தில் ரஜினிக்கு ஜோடியாக நடித்தவர் தீபிகா படுகோன். ஏராளமான இந்தி படங்களில் நடித்து வருகிறார். அவர் கூறியதாவது:ஹீரோக்களுடன் ஒப்பிடும்போது ஹீரோயின்கள் சம்பளம் மிக குறைவு. ஆனால் முன்பு ஹீரோயின்கள் வாங்கிய சம்பளத்தைவிட கடந்த ஒன்றிரண்டு வருடத்தில் பெறும் சம்பளத்துக்கு நிறைய வித்தியாசம் இருக்கிறது. அதிக சம்பளம் பெறும் முயற்சி தொடரும். ஆனால் இதுவொரு போராட்டம் அல்ல. கடைசியில் பார்த்தால் எல்லோருமே படத்தை உருவாக்குவதற்கான பணியில்தான் ஈடுபடுகிறோம். வாங்குகிற சம்பளத்தை வைத்து நடிகைகள் தங்களுக்குள் விரோதம் வளர்த்துக்கொள்ளக்கூடாது. அப்படி செய்தால் படம் உருவாக்குவதற்கான உழைப்பையும் அழகையும் இழந்துவிடுவோம். என்னைப் பொறுத்தவரை பணத்துக்கு அதிக முக்கியத்துவம் தர மாட்டேன். ரசிகர்களின் வரவேற்புதான் முக்கியம். ரூ.100 கோடி வசூல் கிளப் என்பது பாலிவுட்டில் இப்போது பேஷனாக இருக்கிறது. ஆனால் அதை மனதில் வைத்து நான் படங்களை தேர்வு செய்வதில்லை. அப்படியொருவர் செய்தால் அது தவறு. பாக்ஸ் ஆபீசில் படம் ஹிட்டை மனதில் வைத்து நான் படங்களை ஒப்புக்கொள்வதில்லை. சில படங்கள் பெரிய வெற்றி பெறாது என்று தெரிந்தும் கதாபாத்திரத்துக்காக ஒப்புக்கொண்டிருக்கிறேன். ஆனால் அது பெரிய ஹிட் ஆகி இருக்கிறது. அதற்கு விருதும் கிடைத்திருக்கிறது, இவ்வாறு தீபிகா படுகோன் கூறினார்