சரக்கு விமான விபத்த்தில் இருவர் உயிரிழப்பு

115

 

அமெரிக்காவில் சரக்கு விமானம் ஒன்று தரையில் விழுந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணம் பெர்பேங் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று டிசி-4 என்ற சரக்கு விமானம் புறப்பட்டது.

இந்நிலையில் புறப்பட்டு 11 கிலோமீட்டர் தூரம் சென்ற நிலையில் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது.

ஆற்றுங்கரை அருகே விமானம் விழுந்ததில் அதில் தீ பற்றியதில் விமானத்தில் பயணித்த 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

விமான விபத்துக்கான காரணம் குறித்து விசாரணை நடைபெறுவதாக மேலும் தெரிவிக்கப்படுகின்றது.

SHARE