சரண்யா பொன்வண்ணன் மீது கொலைமிரட்டல் புகார்.. பக்கத்து வீட்டு பெண்ணை எச்சரித்த போலீஸ்

113

 

தமிழ் சினிமாவில் அம்மா ரோல் என்றாலே ரசிகர்கள் மனதில் முதலில் வருவது சரண்யா பொன்வண்ணன் தான். விஐபி, தவமாய் தவமிருந்து, எம்டன் மகன், நீர்ப்பறவை உள்ளிட்ட ஏராளமான படங்களில் அம்மா ரோல்களில் அவர் நடித்து இருக்கிறார்.

சென்னை விருகம்பாக்கம் பகுதியில் சரண்யா பொன்வண்ணன் வசித்து வருகிறார். அவர் தனக்கு கொலை மிரட்டல் விடுப்பதாக பக்கத்து வீட்டு பெண் ஸ்ரீதேவி போலீசில் புகார் அளித்து இருந்தார்.

இது சினிமா துறையினருக்கு பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஆனால் அவர் மீது பொய்யான புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது என போலீசார் விளக்கம் கொடுத்து இருக்கின்றனர்.

என்ன பிரச்சனை
சரண்யா பொன்வண்ணன் வீட்டுக்கு உறவினர் ஒருவர் வந்தபோது அவரது கார் மீது பக்கத்து வீட்டுகாரர் கேட் திறந்து இடித்து இருக்கிறார். இது தொடர்பாக அந்த வீட்டினருக்கும் சரண்யா பொன்வண்ணன் உறவினருக்கும் சண்டை நடந்து இருக்கிறது.

பக்கத்து வீட்டு பெண் வாடா போடா.. அப்படி தாண்டா இடிப்போம்” என தகாத வகையில் பேசி இருக்கிறார். சத்தம் கேட்டு பொன்வண்ணன் மற்றும் சரண்யா இருவரும் வெளியில் வந்து பார்த்து தங்கள் உறவினரை வீட்டுக்குள் கூட்டி சென்றிருக்கின்றனர்.

அந்த சிசிடிவி காட்சியை தான் சரண்யா பொன்வண்ணன் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி போலீசில் கொடுத்து இருக்கின்றனர். போலீஸ் சரண்யா தரப்பை அழைத்து விசாரித்தபோது தான் உண்மை தெரியவந்திருக்கிறது.அந்த சிசிடிவி காட்சியை தான் சரண்யா பொன்வண்ணன் கொலை மிரட்டல் விடுப்பதாக கூறி போலீசில் கொடுத்து இருக்கின்றனர். போலீஸ் சரண்யா தரப்பை அழைத்து விசாரித்தபோது தான் உண்மை தெரியவந்திருக்கிறது.மேலும் பக்கத்து வீட்டு பெண் பொய் புகார் அளித்ததால் அவரை போலீசார் எச்சரித்து அனுப்பி இருக்கின்றனர்.

SHARE