சர்க்கரை நோயாளிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் கோர்ன் ப்ளேக்ஸ் சீரியல்

400
ரத்தத்தில் அதிக அளவில் குளுக்கோஸ் சேருவதினால் நீரிழிவு நோய் ஏற்படுகிறது.கணையத்திலிருந்து இன்சுலின் சுரப்பதில் மந்தமோ அல்லது சுரந்த இன்சுலின் உடலில் வேலை செய்வதில் மந்தமோ அல்லது இரண்டுமோ சேர்வதினால் இந்த நோய் வரக்கூடும்.

இந்த நோயால் பாதிக்கப்பட்டவர்கள் உணவில் கவனமாக இருக்க வேண்டும். கொழுப்பு நிறைந்த உணவுகள், மாவுச்சத்து கொண்ட உணவுகளை தவிர்ப்பது நல்லது.

இவர்கள் சோளம் கலந்த உணவினை எடுத்துக்கொள்வது நல்லது, ஆனால் நீரிழிவு நோயாளிகளில் ஏராளமானோர் காலை உணவாக கோர்ன் ப்ளேக்ஸ் சாப்பிடுவார்கள்.

ஆனால் இது ஆரோக்கியமானதா என்பதை அறிந்து கொள்ள வேண்டியது அவசியம்.

ஆரோக்கியமானதா? ஆரோக்கியமற்றதா?

இந்த கோர்ன் ப்ளேக்ஸ் சோளத்தைக் கொண்டு செய்யப்பட்டாலும், அதில் செயற்கை சுவையூட்டிகள் மற்றும் க்ளைசீமிக் இன்டெக்ஸ்(glycemic index) அதிக அளவில் உள்ளது.

இதனால் இரத்த சர்க்கரை அளவு அதிகரித்து, நீரிழிவு தீவிரமடையவும் வாய்ப்புள்ளது.

அதாவது கார்போஹைட்ரேட் அதிகம் நிறைந்த உணவுகள் ரத்த சர்க்கரை அளவை உயர்த்துவதைப்போன்று இந்த க்ளைசீமிக் இன்டெக்ஸ் ஒரே நேரத்தில் இரத்த அளவை அதிகமாக உயர்த்திவிடும், எனவே இதனை கவனமாக உட்கொள்ள வேண்டும்.

மேலும், இந்த கோர்ன் ப்ளேக்ஸில் புரோட்டீன் அளவு குறைவாக இருப்பதால், இதனை உட்கொண்ட பின்னரும் பசி உணர்வு இருக்கும்.

எனவே, மேற்கொண்டு கண்ட உணவுகளை உட்கொள்ள நேரிடும்.

நார்ச்சத்து உணவுகள் ரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தும், ஆனால் கோர்ன் ப்ளேக்ஸில் நார்ச்சத்து குறைவாக இருப்பதால் இதனை சாப்பிடுவது பயனற்றது.

மேலும், கார்ன் ப்ளேக்ஸில் சோடியம் உள்ளது. ஆய்வுகளில் ஒரு கப் கோர்ன் ப்ளேக்ஸில் 1 பாக்கெட் உருளைக்கிழங்கு சிப்ஸில் உள்ளதை விட அதிகமாக சோடியம் நிறைந்துள்ளதாக தெரிய வந்துள்ளது.

இதனால் இரத்த அழுத்தம் அதிகரித்து, இதய நோயால் பாதிக்கப்படும் வாய்ப்பும் உள்ளது.

SHARE