சர்வதேச விமான நிலையத்தில் வைத்து 09 பேர் கைது

411

சிங்கப்பூரிலிருந்து சட்டவிரோதமான முறையில் தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்கட்டுகளை இலங்கைக்கு கடத்த முற்பட்ட 09 பேரை சுங்க அதிகாரிகள் கட்டுநாயக்க, பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து கைதுசெய்துள்ளனர்.

சிங்கப்பூரிலிருந்து டுபாய்க்கு பயணித்து டுபாயிலிருந்து இலங்கைக்கு வந்தபோதே குறித்த நபர்கள் நேற்றிரவு கைதுசெய்யப்பட்டுள்ளனர்.

இவ்வாறு கைதுசெய்யப்பட்டவர்கள் கொழும்பு, மருதானை, நீர்கொழும்பு, சீதுவ, சிலாபம் மற்றும் கண்டி பகுதிகளைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

அத்துடன் அவர்களிடமிருந்து கைப்பற்றப்பட்ட 2 கிலோ 974 கிராம் எடைகொண்ட தங்க நகைகள் மற்றும் தங்க பிஸ்ட்டுகளின் பெறுமதி 1,63,44,179 ரூபா எனவும் சுங்க அதிகாரிகள் மேலும் தெரிவித்துள்ளதுடன், இது தொட்பான விசாரணைகளையும் சுங்க அதிகாரிகள் மேற்கொண்டு வருகின்றனர்.

SHARE