முள்ளிவாய்க்கால் நினைவேந்தலுக்கு தடை முல்லை நீதி மன்ற உத்தரவை ரவிகரனிடம் ஒப்படைத்தது போலிஸ்.
Inbox
|
x |
|
10:32 PM (1 hour ago)
|
|||
|
Tamil
English
Translate message
Turn off for: Tamil
சற்று முன்னர்(இரவு 9.30) வடமாகாணசபை உறுப்பினர் துரைராசா ரவிகரன் அவர்களின் வீட்டுக்கு சென்ற முல்லை காவல்துறையினர் , முள்ளி வாய்க்கால் நினைவேந்தலுக்கு தடை விதிக்கும் முல்லை நீதி மன்ற உத்தரவை நேரில் கையளித்துள்ளனர்.
இதையடுத்து முல்லைத்தீவு காவல் நிலைய பொறுப்பதிகாரி அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட ரவிகரன் அவர்கள் ,
“மே 18 அன்று பேரணியோ அல்லது ஆர்ப்பாட்டமோ ஒழுங்கு செய்யப்படவில்லை.அமைதியான முறையில் சமய கிரியைகள் உள்ளடக்கிய நினைவேந்துதல் நிகழ்வே ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது .கௌரவ முதலமைச்சர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள்,மாகாணசபை உறுப்பினர்கள் கலந்து கொள்ளும் குறித்த நிகழ்வு அமைதியான முறையிலேயே நடைபெறும் என்றும் அமைதியைக் குலைக்கும் வகையிலான எந்த ஒரு நடவடிக்கையும் இடம்பெறாது என்று தெரிவித்தார். இதே வேளை வடமாகாண அவைத்தலைவர் அவர்களால் காவல்துறை மேலதிகாரிகளுக்கு முறைப்படி இந்நிகழ்வு குறித்து அறிவிக்கப்பட்டிருப்பதையும் தெரிவித்தார்.
பதிலளித்த காவல் நிலைய பொறுப்பதிகாரி “பேரணி,ஆர்ப்பாட்டம் என்று மட்டுமல்ல..அனைத்து வகையான நிகழ்வுகளையும் அந்நாளில் நீதிமன்று தடை செய்திருக்கிறது.குறித்த நாளில் எந்த ஒரு நிகழ்வு அங்கே இடம்பெற்றாலும் அது நீதிமன்ற அவமதிப்பாகவே கருதப்படும் என்று தெரிவித்துள்ளார்.
இதையடுத்து ரவிகரன் ,இது குறித்து வடமாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் அவர்களுக்கும் சுகாதார அமைச்சர் அவர்களுக்கும் சக உறுப்பினர்களுக்கும் அறிவித்துள்ளதாகவும் நிலைமையை சாதகமாக எதிர்கொள்வது குறித்து கலந்துரையாடி வருவதாகவும் தெரிவித்துள்ளார்.