உயிர்த்த ஞாயிறு தற்கொலை குண்டுத் தாக்குதல்களின் பிரதான சூத்திரதாரிகளில் ஒருவராக கருதப்படுபவரும் ஷங்ரில்லா ஹோட்டலில் குண்டை வெடிக்கச் செய்த தற்கொலைதாரிகளில் ஒருவரான தேசிய தெளஹீத் ஜமாத் அமைப்பின் தலைவர் சஹ்ரான் ஹாஷிம் தொடர்பிலான டி.என்.ஏ. பகுப்பய்வு அறிக்கை நாளை நீதிமன்றத்துக்கு வழங்கப்பட நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
குறித்த டி.என்.ஏ. பகுப்பயவு நடவடிக்கைகள் பெரும்பாலும் இன்று பூர்த்தி செய்யப்பட்டிருந்த நிலையிலேயே இன்று அதன் அறிக்கை நீதிமன்றத்துக்கும் சி.ஐ.டி.க்கும் வழங்கப்படவுள்ளதக அரிய முடிகின்றது.