சாக்கோ சிப்ஸ் குக்கீஸ் செய்யும் எளிய முறை

335

வீட்டிலேயே செய்யலாம் சாக்கோ சிப்ஸ் குக்கீஸ்

சாக்கோ சிப்ஸ் குக்கீஸ்
தேவையான பொருட்கள்

மைதா மாவு – 65 கிராம்

ஐசிங் சுகர் – 30 கிராம்
பட்டர் ஜி.எஸ்.எம் –  30 கிராம்
உப்பில்லாத வெண்ணெய் – 20 கிராம்
பால் பவுடர் – 5 கிராம்
வெனிலா எசென்ஸ் – 5 மில்லி
சாக்கோ சிப்ஸ் – 10 கிராம்
கோகோ பவுடர் – 2.5 கிராம் (அ) அரை டீஸ்பூன்
பேக்கிங் பவுடர் – 2 கிராம்

அலங்கரிக்க:

சாக்கோ சிப்ஸ் – சிறிதளவு

செய்முறை:

அவனை 150 டிகிரி செல்ஷியஸுக்கு ப்ரீஹீட் செய்யவும்.

மைதா மாவைச் சலிக்கவும்.

ஜி.எஸ்.எம்மை நன்கு அடிக்கவும்.

அதனுடன் வெண்ணெய் சேர்த்துப் பஞ்சு போல் மென்மையாக வரும் வரை அடிக்கவும்.

பிறகு ஐசிங் சுகர் சேர்த்துக் கலக்கவும்.

அதனுடன் மைதா மாவு, பால் பவுடர் சேர்த்து மென்மையான, பிசுபிசுப்பான கலவையாக ஆக்கவும்.

இதில் வெனிலா எசென்ஸ், கோகோ பவுடர், சாக்கோ சிப்ஸ் சேர்த்துக் கலக்கவும்.

மாவுக் கலவையை 5 – 7 கிராம் எடையுள்ள சிறிய உருண்டைகளாக்கி வெண்ணெய் தடவிய பேக்கிங் ட்ரேயில் அடுக்கி மேலே சிறிதளவு சாக்கோ சிப்ஸ் தூவவும்.

இந்த ட்ரேயை ப்ரீஹீட் செய்த அவனுள் வைத்து 15 நிமிடங்கள் வரை `பேக்’ செய்து எடுக்கவும்.

ஆறிய பிறகு நன்கு மொறுமொறுப்பாக இருக்கும்.

SHARE