உலகில் அதிகளவான பயனர்களை தன்னகத்தே கொண்டுள்ள பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக் சட்டிங் செய்வதற்கென தனியாக அறிமுகம் செய்த அப்பிளிக்கேஷனே Facebook Messenger ஆகும்.இந்த அப்பிளிக்கேஷன் ஆனது தற்போது 500 மில்லியன் பயனர்களை எட்டி சாதனை படைத்துள்ளது.
இதன் மூலம் குறுஞ்செய்திகளை விரைவாக அனுப்பக்கூடியதாக இருப்பதுடன், ஸ்டிக்கர்கள், வீடியோக்களை நண்பர்களுக்கு அனுப்பும் வசதியும் காணப்படுகின்றது. Facebook Messenger அப்பிளிக்கேஷன் உருவாக்கப்பட்டமைக்கு விரைவான தொடர்பாடல், குறுஞ்செய்தி அனுப்புதல் போன்றனவே காரணமாக இருந்ததாக பேஸ்புக் நிறுவனத்தின் தலைமை அதிகாரி Mark Zuckerberg தெரிவித்துள்ளார். இதேவேளை உலகெங்கிலும் 1.35 பில்லியன் பயனர்களை பேஸ்புக் கொண்டுள்ளதாகவும் இதில் மூன்றில் ஒரு பங்கினர் Facebook Messenger அப்பிளிக்கேஷனை பயன்படுத்துவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. |