சாதாரணதர பரீட்சை குறித்து கல்வி அமைச்சரின் அறிவிப்பு

129

 

சாதாரணதர பரீட்சையின் மீள் திருத்த பெறுபேறுகள் விரைவில் வெளியிடப்படும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த (Susil Premajayantha) அறிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் வைத்து இன்றைய தினம் (26.04.2024) கருத்து தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

க.பொ.த சாதாரணதர பரீட்சை

அவர் மேலும் தெரிவிக்கையில், இம்முறை கல்விப் பொதுத் தராதர சாதாரணதர பரீட்சை தேர்வு மே இரண்டாவது வாரத்தில் தொடங்கவுள்ளது.

இந்த நிலையில் இதற்கு முன்னதாக கடந்த பரீட்சைக்கான அனைத்து மீள் திருத்த பெறுபேறுகளும் வெளியிடப்படும் என பரீட்சைகள் ஆணையாளர் தெரிவித்துள்ளார் என கல்வி அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.

SHARE