சாந்தனு ஜோடியான – ஆனந்தி

176

`மதயானை கூட்டம்’ படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன், சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு `இராவண கோட்டம்’ என்ற படத்தை இயக்கவிருக்கிறார். சாந்தனு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார்.
இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு சமீபத்தில் வெளியான நிலையில், இந்த படத்தில் சாந்தனு ஜோடியாக நடிக்க கயல் ஆனந்தி ஒப்பந்தமாகி இருக்கிறார். ஆனந்தி நடிப்பில் கடைசியாக வெளியான `பரியேறும் பெருமாள்’ படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்ததுடன், அவரது நடிப்பிற்கும் பாராட்டுக்கள் கிடைத்தது என்பது குறிப்பிடத்தக்கது.

முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் உருவாகும் இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். இந்த படம் குறித்த மற்ற விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

 

SHARE