உலக ஸ்மார்ட்போன் சந்தையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்து மக்களின் மனதை கவர்ந்த சாம்சங் நிறுவனம் சமீபகாலமாக சரிவை சந்தித்து வருகின்றது.
சாம்சங் கேலக்ஸ் நோட் 7 வெடித்து சிதறுவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்த வண்ணம் இருந்ததால் உற்பத்தியை நிறுத்தியது.
மேலும் வாடிக்கையாளர்களுக்கு புதிய போன் வழங்கப்படும் எனவும் அறிவித்துள்ளது.
இந்நிலையில் போன்கள் எதற்காக வெடித்து சிதறியது என்பதற்கான காரணத்தை இன்னமும் சாம்சங் அதிகாரிகளால் கண்டுபிடிக்க முடியவில்லை என கூறப்படுகிறது.
இதற்கிடையே நிர்ணயம் செய்யப்பட்டதை விட பெரியளவு பற்றரி வழங்கயிதாலேயே வெடித்ததாக அமெரிக்க நுகர்வோர் பொருட்களின் பாதுகாப்பு ஆணையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.