சாம்சங் பிஸினஸ் முடிவுக்கு வருகிறது! ஏன் தெரியுமா?

208

சாம்சங் நிறுவனம் தனது கணினி தயாரிப்பு வணிகத்தை லெனோவா நிறுவனத்திடம் விற்க முடிவு செய்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

மின்னணு பொருட்கள் தயாரிப்பில் முன்னணி வகிக்கும் சாம்சங் நிறுவனத்தின் கணினிகள் பல நிறுவனங்களின் தொழில் போட்டியால் கணினி வியாபாரத்தில் சமீபகாலமாக கடும் சரிவை சந்தித்து வருகிறது.

எதிர்ப்பார்த்த லாபம் வராததால் தனது கணிணி வணிகத்தை இன்னொரு மின்னணு நிறுவனமான லெனோவாவிடம் விற்க சாம்சங் நிறுவனம் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தென் கொரியாவில் வெளியாகும் செய்திகளில் சொல்லப்பட்டு வருகிறது.

சாம்சங்-ஐ விட கணினி உற்பத்தி மற்றும் வணிகத்தில் முன்னணியில் இருக்கும் லெனோவா நிறுவனத்திடம் நல்ல லாபகரமான விலைக்கு தங்கள் கணினி வணிகத்தை விற்கும் முயற்சியில் தற்போது சாம்சங் நிறுவனம் ஈடுப்பட்டுள்ளது.

சில மாதங்களுக்கு முன்னர் சாம்சங் நிறுவனம் தனது பிரிண்டர் வணிகத்தை HP மின்னணு நிறுவனத்திடம் விற்றது குறிப்பிடத்தக்கது.

625-0-560-320-500-400-194-800-668-160-90

SHARE