சாம்சங் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு குறைபாடுகள் இருப்பதாக இந்திய ஒன்றிய அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
பாதுகாப்பு குறைபாடு
உலகில் தற்போது நடைபெறும் குற்றச் சம்பவங்களில் பெருவாரியானவை டிஜிட்டல் பின்னணி கொண்ட குற்றச் சம்பவங்களாக அதிகரித்து வருகின்றன. இந்நிலையில் பொதுமக்களுக்கு இந்திய ஒன்றிய அரசு எச்சரிக்கை செய்தி ஒன்றை வெளியிட்டுள்ளது.
அதில் ஆண்ட்ராய்டு 11, 12, 13 மற்றும் 14 வெர்சன்களை கொண்டுள்ள சாம்சங் ஸ்மார்ட்போன்களில் பாதுகாப்பு குறைபாடு இந்தியா அரசு பொதுமக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளது.
இந்த எச்சரிக்கையை இந்திய அரசின் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் என்ற CERT-In விடுத்துள்ளது.
விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கைகள்
எனவே சாம்சங் ஸ்மார்ட்போன் பயனாளர்கள் செக்யூரிட்டி அப்டேட்களை தொடர்ச்சியாக அப்டேட் செய்ய அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் செயலிகளை பிளே ஸ்டோரில் இருந்து மட்டும் பதிவிறக்க செய்ய வேண்டும் என்றும் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் மெசேஜ்கள் மற்றும் இமெயில்களில் வரும் தேவையில்லாத லிங்க்குகளை கிளிக் செய்ய வேண்டாம் என்றும் இந்திய அரசின் கம்ப்யூட்டர் எமர்ஜென்சி ரெஸ்பான்ஸ் டீம் அறிவுறுத்தியுள்ளது.