சாம்சுங் அறிமுகம் செய்யும் Galaxy On8 ஸ்மார்ட் கைப்பேசி

738

625-500-560-350-160-300-053-800-748-160-70-5

கைப்பேசி வடிவமைப்பில் அப்பிள் நிறுவனத்திற்கு போட்டியாக விளங்கும் சாம்சுங் நிறுவனம் மற்றுமொரு புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை விரைவில் அறிமுகம் செய்யவுள்ளது.

இக் கைப்பேசியானது 5.5 அங்குல அளவுடைய Super AMOLED ரக தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், Octa Core 1.6GHz Processor, பிரதான நினைவகமாக 3GB RAM உட்பட, 16GB சேமிப்பு நினைவகத்தினையும் கொண்டுள்ளது.

இவை தவிர 13 மெகாபிக்சல்களை உடைய பிரான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுத்துவதற்கான கமெரா என்பனவும் உள்ளடக்கப்பட்டுள்ளது.

இக் கைப்பேசியில் 3300 mAh உடைய நீடித்து உழைக்கக்கூடிய மின்கலம் மற்றும் 4G LTE தொழில்நுட்பம் என்பனவும் தரப்பட்டுள்ளமை விசேட அம்சமாகும்.

இந்தியாவில் பிளிப்கார்ட் ஊடாக 15,990 பெறுமதியில் இக் கைப்பேசியினை கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும் எனவும், ஏனைய நாடுகளில் 240 டொலர் பெறுமதியில் கொள்வனவு செய்யக்கூடியதாக இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை இக் கைப்பேசியானது எதிர்வரும் அக்டோபர் மாதம் 2ம் திகதி விற்பனைக்கு வரவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE