திரையுலகில் மிகவும் பிரபலமான நடிகைகளில் ஒருவர் சாய் பல்லவி. இவர் தற்போது சிவகார்த்திகேயனின் படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார். இப்படத்தின் தலைப்பு இதுவரை வெளிவரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
மேலும் தெலுங்கில் நாகசைதன்யா உடன் இணைந்து புதிய படத்தில் நடித்த வருகிறார். மலையாளத்தில் அறிமுகமான சாய் பல்லவி தற்போது தென்னிந்திய சினிமாவில் பிஸியான நடிகையாக மாறியுள்ளார்.
தங்கை திருமணம்
சாய் பல்லவியின் தங்கை பூஜாவிற்கு நிச்சயதார்த்தம் நடைபெற்றது. விரைவில் திருமணம் நடக்கவிருக்கும் நிலையில், சாய் பல்லவிக்கு எப்போது திருமணம் என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
சாய் பல்லவியின் முடிவா?
இந்நிலையில் சில ஆண்டுகளுக்கு முன் சாய் பல்லவி திருமணம் குறித்து வந்த செய்தியில் திருமணமாகி விட்டால் பெற்றோரை விட்டுவிட்டு பிரிந்து கணவர் வீட்டிற்கு செல்ல நேரிடும் என சாய் பல்லவி கருதுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அதனால் அவர் திருமணம் செய்து கொள்ளாமல் தன் பெற்றோரை நன்றாக கவனித்துக் கொள்ள முடிவு செய்துள்ளதாக கூறப்பட்டது.
சாய் பல்லவியின் தங்கைக்கு திருமணமாகவிருக்கும் இந்த சமயத்தில், சில ஆண்டுகளுக்கு முன் சாய் பல்லவி திருமணம் குறித்து பேசப்பட்ட செய்தி தற்போது வைரலாகி வருகிறது.