சாவகச்சேரி விபத்தில் ஒருவர் பலி

308

சாவகச்சேரி ஏ-9 வீதியில் டிப்பர் வாகனமும் மோட்டார் சைக்கிளும் மோதி இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்தோடு,மற்றுமொருவர் படுகாயமடைந்துள்ளார்.

இச் சம்பவம் நுணாவில் பொது நூலகத்துக்கு முன்பாக நேற்று இரவு 9.40 மணியளவில் இடம்பெற்றது.

டிப்பர் கனரக வாகனமும் மோட்டார் சைக்கிளும் நேருக்கு நேர் மோதியதால் இவ்விபத்து ஏற்பட்டது என்று பொலிஸார் தெரிவித்தனர்.

மீசாலை மேற்கைச்  சேர்ந்த 45 வயதுடைய நபரே இவ்வாறு உயிரிழந்தார்.

மீசாலை மேற்கைச் சேர்ந்து மற்றைய நபர் படுகாயமடைந்து சாவகச்சேரி ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

டிப்பர் சாரதியை சாவகச்சேரி பொலிஸார் கைது செய்துள்ளதோடு விசாரணைகளையும் முன்னெடுத்துள்ளனர்.

SHARE