`கும்கி-2′ படத்தை இயக்கி வரும் பிரபு சாலமன், அதேநரேத்தில் `ஹாதி மெரே சாதி’ என்ற இந்தி படத்தின் தமிழ், தெலுங்கு பதிப்பையும் இயக்கி வருகிறார். விஷ்ணு விஷால் – ராணா டகுபதி இணைந்து நடிக்கும் இந்த படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு மூணாரில் முடிந்துவிட்ட நிலையில், அடுத்தகட்ட படப்பிடிப்பில் சண்டைக்காட்சியின் போது விஷ்ணு விஷாலுக்கு காயம் ஏற்பட்டது.
காயம் காரணமாக கடந்த சில மாதங்களாக படப்பிடிப்பில் கலந்து கொள்ளாமல் ஓய்வு இருந்து வந்த நிலையில், தற்போது மீண்டும் படப்பிடிப்பில் இணைந்திருக்கிறார். இதுகுறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது, மீண்டும் பிரபு சாலமன் படத்தில் இணைந்திருக்கிறேன். விட்ட இடத்தில் இருந்து படப்பிடிப்பை துவங்கியிருக்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.
Back to prabhu solomon sir’s shoot 🙂 strtd d shoot frm wher i left 🙂 #stunts ???? 🙂 today rest day 🙂 #mumbai #workout pic.twitter.com/eUZ9m4JrLY
— VISHNU VISHAL – VV (@TheVishnuVishal) May 5, 2019
இந்த படத்தின் தமிழ் பதிப்பிற்கு `காடன்’ என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. அதேபோல் தெலுங்கு பதிப்புக்கு `ஆரண்யா’ என்றும் தலைப்பு வைத்துள்ளனர்.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இந்த படத்தை ஈராஸ் இன்டர்நேஷனல் பிக்சர்ஸ் தயாரிக்கிறது. இந்தி பதிப்பில் புல்கித் சாம்ராட் நடித்த கதாபாத்திரத்தில் விஷ்ணு விஷால் நடிக்கிறார். இந்த படத்தின் மூலம் விஷ்ணு விஷால் தெலுங்கு சினிமாவிலும் அறிமுகமாகிறார்.