சிக்கலில் கூகுள் தானியங்கி கார் வடிவமைப்பு?

232

பல கார் வடிவமைப்பு நிறுவனங்களின் போட்டிகளுக்கு மத்தியில் கூகுள் நிறுவனமும் தானியங்கி கார்களை வடிவமைக்கும் முயற்சியில் இறங்கியிருந்தது.

இக் கார்கள் வடிவமைக்கப்பட்டு பல சோதனை ஓட்டங்களையும் நிகழ்த்தியுள்ள இந்த நேரத்தில் இத் திட்டம் முழுமை பெறுவதில் சிக்கில் ஏற்பட்டுள்ளது.

அதாவது இத் திட்டமானது 2009ம் ஆண்டின் பிற் பகுதியில் ஆரம்பிக்கப்பட்டிருந்த நிலையில் அன்றிலிருந்து இன்று வரை சுமார் ஏழரை வருடங்களாக பணி புரிந்தவர் Chris Urmsom.

இவர் தற்போது கூகுளின் குறித்த திட்டத்திலிருந்து தான் விலகுவதாக உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார்.

இதன் காரணமாகவே கூகுளின் தானியங்கி கார் திட்டம் முழுமை பெறுவதில் சிக்கல் நிலை தோன்றியுள்ளது.

எனினும் Chris Urmsom தான் அத் திட்டதிலிருந்து வெளியேறுவதற்கான காரணத்தை இதுவரை வெளியிடவில்லை.

இதேவேளை கூகுள் நிறுவனம் தனது தானியங்கி திட்டத்தில் பணி புரிந்த சில முன்னணி பணியாளர்களை தொடர்ச்சியாக இழந்து வருகின்றமை இங்கே சுட்டிக்காட்டத்தக்கது.

SHARE