சிக்ஸர் மழையில் 248 ரன்கள் குவித்த அணி! வீணான சதம்..புயல்வேகத்தில் சாய்த்த இலங்கை வீரர்

102

 

SA20 தொடரில் MI கேப்டவுன் அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணியை வீழ்த்தியது.

ரிக்கெல்ட்டன்,பிரேவிஸ் ருத்ர தாண்டவம்
செஞ்சுரியனின் சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் நடந்த போட்டியில், MI கேப்டவுன் மற்றும் பிரிட்டோரியா கேபிட்டல்ஸ் அணிகள் மோதின.

நாணய சுழற்சியில் வென்ற MI அணி முதலில் துடுப்பாடியது. வான் டெர் டுசன் 9 பந்துகளில் 3 சிக்ஸர்களை பறக்கவிட்டு 21 ஓட்டங்கள் எடுத்தார்.

அடுத்து வந்த லிவிங்ஸ்டன் 12 ஓட்டங்களில் அவுட் ஆக, ரிக்கெல்ட்டன் மற்றும் பிரேவிஸ் கூட்டணி ருத்ர தாண்டவம் ஆடியது. இருவரும் வாணவேடிக்கை காட்டினர்.

பர்னெல் இந்த கூட்டணிக்கு 14வது ஓவரில் முற்றுப்புள்ளி வைத்தார். அவரது பந்துவீச்சில் ரிக்கெல்ட்டன் (Rickelton) 90 (45) ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அவரின் ஸ்கோரில் 5 சிக்ஸர், 10 பவுண்டரிகள் அடங்கும்.

பின்னர் வந்த சாம் கர்ரன் அதிரடியாக 12 பந்துகளில் 22 ஓட்டங்கள் விளாசினார். பொல்லார்டு ஆட்டமிழக்காமல் 27 (7) ஓட்டங்களும், பிரேவிஸ் 32 பந்துகளில் 6 சிக்ஸர், 3 பவுண்டரிகளுடன் 66 ஓட்டங்களும் குவித்தனர். இதன்மூலம் MI அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 248 ஓட்டங்கள் குவித்தது.

இந்த இன்னிங்சில் மொத்தம் 20 சிக்ஸர்கள் விளாசப்பட்டுள்ளன. பிரிட்டோரியா அணியின் தரப்பில் கேப்டன் பர்னெல் 3 விக்கெட்டுகளும், டுபாவில்லோன் ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

கைல் வெர்ரேன்னே சதம்
இதனைத் தொடர்ந்து களமிறங்கிய பிரிட்டோரியா அணியின் தொடக்க வீரர் சால்ட்டை 5 ரன்னில் சாம் கர்ரன் வெளியேற்றினார். அடுத்து வில் ஜேக்ஸ் அதிரடியாக 9 பந்துகளில் 26 ஓட்டங்கள் எடுத்த நிலையில் ரபடா பந்துவீச்சில் போல்டு ஆனார்.

பின்னர் கைல் வெர்ரேன்னே மட்டும் நிலைத்து நின்று துவம்சம் செய்ய, ஏனைய வீரர்கள் நுவான் துஷாரா (இலங்கை) மற்றும் ரபடாவின் புயல்வேக பந்துவீச்சில் விக்கெட்டுகளை பறிகொடுத்தனர்.

கடைசி கட்டத்தில் கேப்டன் பர்னெல் 23 ஓட்டங்களும், அடில் ரஷீத் ஓட்டங்களும் எடுத்தனர். இறுதிவரை களத்தில் நின்ற கைல் வெர்ரேன்னே 52 பந்துகளில் 116 ஓட்டங்கள் குவித்தார். இதில் 9 சிக்ஸர், 7 பவுண்டரிகள் அடங்கும்.

இதன்மூலம் பிரிட்டோரியா அணி 214 ஓட்டங்கள் எடுத்ததால், 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் MI அணி அபார வெற்றி பெற்றது. MI கேப்டவுன் அணியின் தரப்பில் துஷாரா 3 விக்கெட்டுகளும், ரபடா 2 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.

 

SHARE