சிங்கப்பூரில் 179 ஆண்டுகள் பழமையான கோவில் சீரமைப்பு

542

சிங்கப்பூரில் 179 ஆண்டு பழமையான கோவில் சீரமைக்கப்பட்டது.

சிங்கப்பூரில் லிட்டில் இந்தியா பகுதியில் இந்தியர்கள் அதிகமாக உள்ளனர். குறிப்பாக இங்கு தமிழர்கள் பெருமளவில் உள்ளனர்.

இந்த நிலையில் இடம் பெயர்ந்து அங்கு குடியமர்ந்த தமிழர்கள் கடந்த 1835–ம் ஆண்டில் வீரமாகாளியம்மன் கோவிலை கட்டினர்.

இதற்கிடையே சிங்கப்பூரில் உள்ள 75 கட்டிடங்கள் புராதன சின்னமாக தேர்ந்தெடுக்கப்பட்டு அறிவிக்கப்பட்டது.

அதைத்தொடர்ந்து அக்கோவில் தற்போது சுமார் 30 கோடி ரூபாய் செலவில் முற்றிலும் புதுப்பிக்கப்பட்டுள்ளது. மராமத்து பணிகள் முற்றிலும் முடிவடைந்து விட்டது.

தற்போது புதுப்பொலிவுடன் திகழும் அக்கோவில் வருகிற 22–ந் திகதி மீண்டும் திறக்கப்பட உள்ளது. அதற்கான பணிகள் நடந்து வருகின்றன.

SHARE