சிங்கள அரசிற்கு துனைபோன முஸ்லீம் அரசியல் வாதிகளின் நிலை என்ன? – பிரசன்னா இந்திரகுமார்

477

எமது நாட்டில் முஸ்லிம் இன­வாத அர­சி­யல்­வா­திகள் தமிழ் மக்­க­ளுடன் சேர்த்து முஸ்லிம் மக்­க­ளையும் ஏமாற்­றி­ய­தா­கவே வர­லா­றுகள் காணப்­ப­டு­கின்­றன. அவர்கள் காலத்­திற்கு காலம் கூறி வரு­கின்ற வார்­த­தைகள் எல்லாம் நீர் மேல் எழு­திய எழுத்துப் போலவே இருக்­கின்­றது என தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் கிழக்கு மாகா­ண­சபை உறுப்­பினர் பிர­சன்னா இந்­தி­ர­குமார் தெரி­வித்தார்.

images

ஞாயிற்­றுக்­கி­ழமை அமிர்­த­க­ழியில் இடம்­பெற்ற விளை­யாட்டுப் போட்டி நிகழ்வில் பிர­தம அதி­தி­யாக கலந்து கொண்டு உரை­யாற்றும் போதே அவர் இவ்­வாறு தெரி­வித்தார். இங்கு அவர் மேலும் கூறி­ய­தா­வது:–

எமது சமூகம் விளை­யாட்டு, கல்வி போன்ற செயற்­பா­டு­களில் இவ்­வாறு பல திற­மை­களை வெளிப்­ப­டுத்­து­வது வர­வேற்­கத்­தக்­க­தான விட­யமே அதுவும் இந்த சின்­னஞ்­சி­றார்கள் விளை­யாட்­டு­களில் திறமை காட்­டு­வ­தென்­பது மன­திற்கு மகிழ்­வினை ஏற்­ப­டுத்தக் கூடி­யதே. இவ்­வாறு சிறு­வர்­களை ஒரு விட­யத்தில் ஈடு­ப­டுத்­து­வ­தென்­பது மிகவும் கடி­ன­மான விடயம். அத்­தகு சேவை­யா­னது மிகவும் அர்ப்­ப­ணிப்­புடன் மேற்­கொள்­ளப்­ப­ட­வேண்டும் அந்­த­வ­கையில் இவ்­வாறு இந்த சிறு­வர்­க­ளுக்கு ஊக்கம் கொடுத்­த­வர்­க­ளுக்கு நான் பாராட்­டு­களை தெரி­வித்துக் கொள்­கின்றேன்.

எமது சமூகம் இன்று இருக்கும் இக்­கட்­டான கால­கட்­டத்தில் நாம் எமது எதிர்­கால சந்­த­தி­க­ளா­கிய எமது சிறார்­களை முன்­னேற்­று­வதன் மூலமே எமது சமூகத்­தி­னையும் எமது இனத்­தி­னையும் எதிர்­கா­லத்தில் ஒரு நல்ல நிலையில் இருக்­கப்­பண்ண முடியும். இன்று எமது இனம் தேசிய ரீதியில் மட்­டு­மல்­லாது மாகாண ரீதி­யிலும் புறக்­க­ணிக்­கப்­பட்டே வரு­கின்­றது தொழில் வாய்ப்­ப­பு­க­ளிலும் சரி ஏனைய விட­யங்­க­ளிலும் சரி இதற்கு அண்­மைக்­கா­லத்தில் கொடுக்­கப்­பட்ட வேலை­வாய்ப்­பு­களே சான்று. இதிலே நன்கு தெரி­கின்­றது எமது கிழக்கு மாகா­ணத்தில் இருக்கும் முஸ்லிம் இன­வாத அர­சி­யல்­வா­திகள் தங்கள் வாக்கு இருப்­பினை தக்க வைத்துக் கொள்­வ­தற்­காக இந்த அர­சியல் மேடையில் எத்­தகு நாட­கங்­களைப் போடு­கின்­றார்கள் என்று.

இந்­நாட்டில் இருக்கும் முஸ்லிம் இன­வாத அர­சியல் தலை­வர்கள் எமது வட­கி­ழக்கு மண்ணைப் பிரித்து இந்த அர­சாங்­கத்­துடன் சேர்த்து வடக்­கிற்கு என்று தனி­யா­கவும் கிழக்­கிற்கு என்று தனி­யா­கவும் மாகா­ண­ச­பை­களை அமைத்து இன்று கிழக்கு மாகா­ண­ச­பையில் முஸ்லிம் முத­ல­மைச்சர் ஒருவர் இருக்­கத்­தக்­க­தா­கவும் மாகா­ண­சபை அமைச்­சுக்­களில் கூடி­ய­ளவு முஸ்லிம் அமைச்­சர்கள் இருக்­கத்­தக்­க­தா­கவும் வைத்துக் கொண்டு தமிழ்­மக்­களை நாம் கைவி­ட­மாட்டோம் அனைத்­து­மக்­க­ளுக்கும் ஒரே வித­மான பார­பட்­ச­மில்­லாத ஆட்­சி­யினை மேற்­கொள்வோம் என்று கூறிக்­கொண்டே இது­வரை எமது மக்­க­ளுக்கு புறக்­க­ணிப்­பினை மாத்­தி­ரமே பரி­சாக வழங்கிக் கொண்­டி­ருக்­கின்­றார்கள்.

தங்­களின் அர­சியல் இலா­பத்­திற்­காக முஸ்லிம் மக்­களை ஏமாற்றி தங்கள் வாக்கு வங்­கி­களை நிரப்பி ஆட்­சியில் அமர்ந்து கொண்டு கிழக்கு மாகா­ணத்தில் தமி­ழர்­க­ளுக்கு கிடைக்­க­வேண்­டிய வேலை­வாய்ப்பு மற்றும் ஏனைய பிர­தி­நி­தித்­து­வங்­களை அவர்­க­ளுக்கு கொடுக்க மறுத்து தமி­ழர்­களை புறக்­க­ணித்து தங்கள் அர­சியல் நோக்­கத்­திற்­காக முஸ்லிம் சமூ­கத்­தி­ன­ருக்கு அதி­க­ள­வான வேலை­வாய்ப்­பு­களை கொடுத்து எமது தமிழ் சமூ­கத்­தி­னரை ஓரம்­கட்­டு­கின்­றனர்.

அண்­மையில் ஒரு முஸ்லிம் அமைச்சர் தெரி­வித்தார். இந்த மாகாணம் மூவி­ன­மக்­களும் வாழு­கின்ற மாகாணம், இங்கு தமிழ் இனத்தைச் சேர்ந்­த­வரும் ஆளலாம். முஸ்லிம் இனத்தைச் சேர்ந்தவரும் ஆளலாம் சிங்­கள இனத்தைச் சேர்ந்தவரும் ஆளலாம் இங்கு பிரி­வினை என்­பது இல்லை பார­பட்சம் ஏதும் இல்லை என்று தெரிவித்தார். இவ்­வாறு நுனி­நாக்கில் சமத்­து­வத்தைப் பேசி­விட்டு பின்னர் இவர்கள் எமது மக்­க­ளுக்கு புறக்­க­ணிப்­பினை மாத்­தி­ரமே பரி­சாக வழங்­கு­கின்­றனர்.

வட­கி­ழக்கு என்­பது தமி­ழர்­களின் தாயகம். இதனைப் பிரித்­தாளும் இந்த அர­சாங்­கத்­துடன் இணைந்து ஆட்­சியை நடத்தும் இவ்­வா­றான இன­வாத முஸ்லிம் அர­சி­யல்­வா­திகள் எமது தமிழ்­மக்­க­ளுக்கு பசப்பு வார்த்­தைகள் கூறி ஏமாற்ற நினைக்­கின்­றார்கள்.

SHARE