இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, நாடாளுமன்றத்தை வந்தடைந்தார்.
அவரை, சபாநாயகர் சமல் ராஜபக்ஷ வரவேற்றார். அத்துடன் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் சந்தித்து கலந்துரையாடுவார்.
இந்த பாராளுமன்றம் ஆசியாவின் பழமையான பாராளுமன்றங்களில் ஒன்று.
இரு நாடுகளுக்கும் இடையில் கலாச்சார பரிமாற்றம் இருப்பது பெருமை அளிக்கிறது.
இரண்டு நாடுகளும் இணைந்து செயற்பட்டால் இலக்கை விரைந்து அடைய முடியும். என இந்தியப் பிரதமர் பாராளுமன்றத்தில் உரையாற்றிக் கொண்டு இருகின்றார்.
தெற்காசியாவில் இலங்கை வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக உள்ளது.
இலங்கையில் நடைபெற்ற தேர்தல் ஜனநாயகத்தின் கொண்டாட்டம்.
அண்டை நாடுகளின் வளர்ச்சிக்கு இந்தியா உறுதுணையாக இருக்கும். அடுத்த கட்ட நடவடிக்கையாக என்ன செய்யலாம் என்பதை இலங்கைதான் முடிவு செய்ய வேண்டும்.
கடுமையான தீவிரவாத தாக்குதல்களை எதிர்கொண்டு சமாளித்து வருகின்றோம். இந்திய ரிசர்வ் வங்கி 1.5. பில்லியன் டொலர்களை இலங்கைக்கு உதவியாக வழங்கியுள்ளது.
இலங்கையின் ரயில்வே திட்டத்திற்கு 350 பில்லியன் டொலர்களை இந்தியா வழங்கவுள்ளது. இரு நாடுகளுக்கும் இடையில் தொடர்புகளை அதிகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அணு ஒப்பந்தங்களில் இரு நாடுகளும் கையெழுத்திட்டுள்ளன. கடலோர பகுதிகளின் பாதுகாப்பை உறுதி செய்வது இரு நாடுகளின் பொறுப்பாகும்.
இரு நாடுகளுக்கும் இடையில் கருத்து வேறுபாடுகள் இருக்கலாம். இதனை பேச்சுவார்த்தை மூலமே தீர்க்க வேண்டும். இலங்கை – இந்திய உறவிற்கு புத்துயிர் கொடுக்க வேண்டும்.
இலங்கை ஜனாதிபதி இந்தியாவுக்கு முதல் வெளிநாட்டு விஜயமாக வருகை தந்தமை பெருமை அளிக்கின்றது.
நாளை தலைமன்னாருக்கு விஜயம் செய்ய உள்ளேன்.
இந்தியாவின் தேசிய கவிஞரான சுப்ரமணியபாரதி சிங்கள தீவினுக்கோர் பலம் அமைப்போம் என படினார் சமய, மொழி, கலாசாரம் போன்றவற்றால், இந்தியாவுக்கு இலங்கைக்கும் நெருக்கமான நீடித்த உறவுகள் இருந்து வருகிறது. என தெரிவித்து உரையை நிறைவு செய்தார்.
மோடி மைத்திரிபாலவை சந்தித்தார்: முக்கிய 4 ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது
இலங்கை சென்றுள்ள இந்திய பிரதமர் நரேந்திர மோடி, இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவை சந்தித்துள்ளார்.
இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்று வருகிறது. இரண்டு நாடுகளுக்கு இடையிலான முக்கிய விடயங்கள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.
இலங்கையின் முந்தைய அரசாங்கம், சீனா அரசாங்கத்துடன் நெருக்கமாக இருந்து வந்ததுடன் புதிய அரசாங்கம் இந்தியாவுடன் நெருக்கமான உறவுகளை பேணி வருகிறது.
துறைமுக நகர அபிவிருத்தி திட்டம் உட்பட சீனா, இலங்கையில் மேற்கொண்ட அபிவிருத்தி பணிகள் நிறுத்தப்பட்டுள்ளன.
இந்த நிலையில், இலங்கை நாட்டின் அபிவிருத்தி மற்றும் பொருளாதார உதவிகளை இந்தியாவிடம் கோரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனாதிபதி செயலகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தைகளில் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்க உட்பட அமைச்சரவை அமைச்சர்களும் பங்கேற்றுள்ளனர்.
அதேவேளை இந்திய பிரதமரும், இலங்கை ஜனாதிபதியும் முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட உள்ளனர்.
முன்னதாக இலங்கை சென்றடைந்த இந்திய பிரதமருக்கு, கொழும்பு காலி முகத்திடல் பகுதியில் இருக்கும் ஜனாதிபதி செயலக வளாகத்தில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.
இந்தியா மற்றும் இலங்கை நாடுகளில் தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டதுடன் மரியாதை பீரங்கி வேட்டுக்களும் தீர்க்கப்பட்டன.
இதனையடுத்து இந்திய பிரதமருக்கு இலங்கை ஜனாதிபதி செங்கம்பள வரவேற்பளித்தார்.
இதேவேளை இன்று பிற்பகல் 3.15 மணிக்கு இந்தியப் பிரதமர் இலங்கைப் பாராளுமன்றில் உரையாற்றவுள்ளார்.
(இரண்டாம் இணைப்பு)
தற்போது நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது. விசா நீடிப்பு, சுங்கத்துறையில் ஒத்துழைப்பு உள்ளிட்ட நான்கு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளது.
1.இராஜதந்திர மற்றும் அதிகாரிகள் பயணிக்கும் போது விசா இன்றி பயணிப்பதற்கான ஒப்பந்தம்.
2.சுங்க நடவடிக்கைகளின் போது இருநாடுகளுக்கும் இடையில் உதவி செய்துகொள்வதற்கான ஒப்பந்தம்.
3.இளைஞர் முன்னேற்றத்துக்கான ஒப்பந்தம்.
4.ரவிநாத் தாகூர் மன்றத்தை ருகுணு பல்கலைக்கழகத்தில் நிறுவுவதற்கான ஒப்பந்தம் ஆகியனவே கைச்சாத்திடப்பட்டன.
மோடியின் வருகை வரலாற்றுச் சிறப்புமிக்கது என இலங்கை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
இலங்கைக்கு 28 வருடங்களின் பின்னர் விஜயம் செய்த இந்திய பிரதமர் என்ற வகையில் பெருமைப்படுவதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
இறுதியாக இந்திய பிரதமர் ஒருவர் 1987 ஆம் ஆண்டே இலங்கை வந்தார்.
இலங்கை வழங்கிய வரவேற்பு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இலங்கையின் ஜனாதிபதி செயலகத்தில் இன்று உரையாற்றும் போதே மோடி இதனை கூறியுள்ளார்.
13ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாகவும் விரைவாகவும் செயற்படுத்துவது சமரச தீர்வை ஏற்படுத்தும்.
இலங்கையில் தமிழர்கள் உட்பட அனைத்து தரப்பினருக்கும் சமமான உரிமையை வழங்க இந்தியா உதவும்.
மீனவர் பிரச்சனை மனிதாபிமான அடிப்படையில் அணுக வேண்டும்.
திருகோணமலையை, பிராந்தியத்தின் எரிபொருள் மத்திய நிலையமாக மாற்ற இந்தியா உதவும்.
இலங்கைக்கும் இந்தியாவுக்கும் இடையில், இலங்கையில் பௌத்தம் வந்த நாளில் இருந்தே தொடர்புள்ளது.
மீனவர்களில் பிரச்சினைக்கு இருத்தரப்பிலும் சுமூகமான தீர்வுகாண நடவடிக்கை எடுக்கப்படும்.
இரு நாடுகளுக்கு இடையிலான பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகள் மேம்படுத்தப்படும். இலங்கையில் பொருளாதார வளர்ச்சிக்கு இந்தியா உதவும்.
சம்பூர் அனல் மின் நிலையம் இலங்கையின் மின் சக்தி தேவைக்கு உதவியாக இருக்கும்.
இரு நாடுகளின் உறவின் இதயம் மக்கள். ராமர் ஜெயந்தியை முன்னிட்டு, ஏப்ரல் 14 ஆம் திகதி இராமாயண ரயில் சேவை ஆரம்பிக்கப்படும்.
இலங்கையில் இராமாயணம் தொடர்பான இடங்களையும் இந்தியாவில் பெளத்தமதம் சம்பந்தமான இடங்களையும் சுற்றுலா துறை மேம்படுத்தப்படும்.
இலங்கையில் இந்தியா திருவிழாக்கள் கொண்டாடப்படுவதன் மூலம் இரு நாடுகளுக்கும் இடையில் கலாச்சார உறவுகள் மேம்படுத்தப்படும்.
இலங்கை வந்தடைந்தார் இந்திய பிரதமர் நரேந்திர மோடி
இந்திய பிரதமர் நரேந்திர மோடி இன்று அதிகாலை 5.30அளவில் இலங்கையை வந்தடைந்தார்
அவரை ஏற்றி வந்த விசேட விமானம் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தது.
பிரதமர் மோடியை இலங்கையின் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க வரவேற்றார்.
இந்தநிலையில் மோடி, பாதுகாப்புடன் கொழும்புக்கு அழைத்து வரப்படுகிறார்.
கொழும்பில் இன்று அவர் முற்பகலில் ஜனாதிபதி செயலகத்தில் இடம்பெறும் நிகழ்வில் பங்கேற்கவுள்ளார்.
இதனையடுத்து மாலையில் இலங்கையின் நாடாளுமன்றத்தில் உரையாற்றவுள்ளார்.
அத்துடன் பல்வேறு தரப்பினரையும் அவர் சந்தித்து கலந்துரையாடவுள்ளார்.
இதனையடுத்து நாளை அவர் வடக்குக்கான விஜயத்தை மேற்கொள்ளவுள்ளார்.
1987 ஆம் ஆண்டின் பின்னர் இலங்கை வந்துள்ள முதல் இந்திய பிரதமர் என்ற பெருமையை மோடி பெற்றுள்ளார்.