சிங்கள மிருக வெறிபிடித்த இனவழிப்பு ஸ்ரீலங்கா இராணுவப் பிடியில் கைகள் கட்டப்பட்ட நிலையில் கேணல் வசந்தன் !
இறதிக்கட்ட போரில்- இராணுவத்தினரிடம் சரணடைந்த பின்னர் கைகள் பின்புறமாக கட்டப்பட்ட நிலையில் தமக்கு என்ன ஆகப்போகின்றதோ என்ற ஏக்கத்தோடு நிலத்தில் அமர்த்தப்பட்ட நிலையில் சில தமிழர்கள் உள்ள காட்சிப்பதிவாக புகைப்படம் ஒன்று அண்மையில் வெளியாகியிருந்தது. அதில் ஒரு சிறுவனும் இருந்தார்.
அவருக்கு பாலச்சந்திரனை விட வயது குறைவாக இருக்கும் என்ற தலைப்பில் நாம் செய்தி வெளியிட்டு இருந்தோம்.
இறுதியில் அச் சிறுவன் உட்பட பலரது உடலங்கள் நிலத்தில் காணப்படும் வீடியோவையும் நாம் ஏற்கனவே வெளியிட்டு இருந்தோம். அப்புகைப்படத்தில் முதலாவதாக இருப்பவர் கேணல் வசந்தன் என்று தற்போது அடையாளம் காணப்பட்டுள்ளார்.
கேணல் வசந்தனது உறவினர்கள் தொடர்புகொண்டு இதனை உறுதிப்படுத்தியுள்ளார்கள். 2009 இறுதியுத்தத்தின் போது இராணுவத்தினருடன் நடைபெற்ற சண்டைக் களத்தில் திருமலை மாவட்ட சிறப்புத் தளபதி வசந்தன் அவர்கள் இலங்கையரச படைகளினால் கைது செய்யப்பட்டிருந்தார்.
மாவிலாறு தொடக்கம் முள்ளிவாய்க்கால் நந்திக்கடல் கடைசிச் சமர் வரை நின்று களமாடிய தளபதிகளில் தளபதி கேணல் வசந்தனும் ஒருவர்.இவர் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் பழகுவதற்கு ஒரு மென்போக்கான தளபதியாகவும் போராளிகளும் பொறுப்பாளர்களும் விரும்பப்படுபவராக இருந்தார். தளபதி வசந்தன் புலனாய்வுத் துறையில் பொட்டம்மானுடனும் , கபிலம்மானுடனும் சில வருடங்கள் இணைந்து திறம்படச் செய்யப்பட்டார்.
திருமலை மாவட்டத்தின் மிக நீண்டகாலப் போராளிகளில் தளபதி வசந்தன் அவர்களும் ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் தளபதி சொர்ணம் அவர்களின் ஆரம்பகால நண்பரும் ஆவார். முள்ளிவாய்க்கால் யுத்தகளத்தில் தனது புதல்வர் ஒருவரையும் இழந்திருந்தார்.
இவர் இறுதியுத்த சமர்க்களத்திலிருந்து கைது செய்யப்பட்ட பின்னர் உடைகள் களையப்பட்டு, கைகள் பின்புறமாகக் கட்டப்பட்ட நிலையில் சிறிலங்கா இனவெறி அரச படைகளால் நந்திக்கடல் பகுதியில் வைத்து சுட்டுக் கொல்லப்பட்ட போராளிகளில் இவரும் ஒருவர் என்றும் தெரியவருகிறது. 2006 இன் பிற்பகுதியில் திருமலை மாவட்டத்தின் சிறப்புத் தளபதியாக பொறுப்பேற்ற வசந்தன் அவர்கள் கேணல் தர போராளி என்பதும் குறிப்பிடத்தக்கது.
இலங்கையின் போர்க்குற்றம்: “இனவெறித்தீயில் இரையான இளந்தளிர்கள்”- புதிய தலைமுறை புதிய ஆதாரம் வெளியீடு செய்துள்ளார்-
எனினும் போருக்கு பிந்தைய காலகட்டத்தில் நிறைவேற்றப்படும் மரண தண்டனைகள் அத்தனையுமே போர்க் குற்றங்கள்தான் என்பதை ஐ நாவும் மறுக்க முடியாத ஒன்றாகும் என்பதை சுட்டிக்காட்டுகின்றோம்.
பிரிகேடியர் மாதவன் மாஸ்டர் வீரச்சாவு! ஆதாரப்படுத்தும் புகைப்படம்
தமிழீழ விடுதலை புலிகள் இயக்கத்தின் ஆரம்பகால உறுப்பினர்களில் ஒருவரும், விடுதலைப் புலிகளின் புலனாய்வுத் துறையின் ஆரம்பகால பொறுப்பாளருமாகிய, பிரிகேடியர் மாதவன் மாஸ்டர் அவர்கள் 2009முள்ளிவாய்க்கால் இறுதிச் சமரில் வீரச்சாவடைந்துள்ளார். தலைவர், பொட்டமான், மாதவன் மாஸ்ரர் என குறிப்பிடும் அளவிற்கு புலனாய்வுத்துறையின் வளர்ச்சியிலும் அதன் முன்னேற்ற கட்டுமானத்திலும் முக்கிய பொறுப்பு வகித்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
புலனாய்வுத்துறையில் மிகத் திறமையான செயற்பாடுகளை உடைய பலரை இனம் கண்டு அவர்களின் ஊடாக, விடுதலைப் புலிகளுக்கான புலனாய்வின் வீச்சை அதிகரித்து, அதன் செயற்பாடுகளை விரிவுபடுத்தியவர். உலகநாடுகளில் வாழும் பலரது அன்பையும் நட்பையும் பெற்று புலனாய்வுத்துறை திறம்பட செயற்பட்ட மூத்த தளபதிகளில் மாதவன் மாஸ்ரர் அவர்கள் குறிப்பிடத்தக்க இடத்தை தனக்கென பதிவுசெய்தவர்.
கடந்த வருடம் வெளியான சிறிலங்கா இனவெறி அரசின் இனவழிப்பு மற்றும் யுத்தக்குற்ற மீறல் தொடர்பான காணொளி காட்சி ஒன்றில் மாதவன் மாஸ்டரின் வித்துடலும் அடையாளம் காணப்பட்டுள்ளது.
தான் நேசித்த மண்ணின் விதையாக வீழ்ந்துள்ள பிரிகேடியர் மாதவன் மாஸ்டர் அவர்களால் வளர்க்கப்பட்ட புலனாய்வுத் துறைப் போராளிகள் பலரை முள்ளி வாய்க்காலில் இருந்து கடுமையான முயற்சிகளின் ஊடாக பாதுகாப்பாக வெளியேற்றிவிட்டு இறுதிவரை முள்ளிவாய்க்காலில் நின்று களமாடியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவரால் பயிற்ரப்பட்டு சிறிலங்கா அரசின் கட்டுப்பாட்டுப் பகுதிகளுக்குள்ளும், அரச நிர்வாகங்களுக்குள்ளும், அதன் படைகளுக்குள்ளும் ஊடுருவி தமது செல்வாக்கைச் செலுத்தி உளவு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்த பலர், கடைசி நேர சரணடைவின் போது மிகக் கடுமையான காயங்களுடன் இராணுவத்திடம் சரணடைந்து சிகிச்சைக்காக வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டிருந்த போராளிகள் பலரை பாதுகாப்பாக வெளியேற்றியவர்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.
முள்ளிவாய்க்காலில் இருந்து பிரிகேடியர் மாதவன் மாஸ்ரர் அவர்களும் பாதுகாப்பாக வெளியேறியிருப்பார் என எண்ணியிருந்த போராளிகளுக்கு இவரின் வீரச்சாவு செய்தி ஏற்க முடியாத ஒன்றாகவே அமையும்.
பிரிகேடியர் மாதவன் மாஸ்ரர் அவர்களுக்கும் அவருடன் வீரச்சாவடைந்த மாவீரர்கள் அனைவருக்கும் எமது வீர வணக்கத்தை தெரிவித்துக்கொண்டு மாவீரர்களின் இலச்சியக் கனவை வென்றெடுப்போம் என உறுதி எடுத்துக் கொள்வோம்.
- கடைசிப் போர்க்களத்தில் இறுதியாக வீழ்ந்த போராளி யார்? எப்போது, எங்கே ,எப்படி வீழ்ந்தார்?
- தமிழீழத் தேசியத் தலைவர் பிரபாகரனின் வீரச்ச்சாவு பற்றிய கேள்விகளும் சந்தேகங்களும் ?
- முள்ளிவாய்க்கால் வீரமறவர்களுக்கு வீரவணக்கம்
-
- பிரிகேடியர் பொட்டம்மான் வீரவணக்கம்
- பிரிகேடியர் ரமேஷ் வீரவணக்கம்
- பிரிகேடியர் புலித்தேவன் வீரவணக்கம்
- பிரிகேடியர் நடேசன் வீரவணக்கம்
- கேணல் சாள்ஸ் அன்ரனி வீரவணக்கம்
- கடற்புலிகளின் சிறப்புத்தளபதி பிரிகேடியர் சூசை வீரவணக்கம்
- பிரிகேடியர் பானு வீரவணக்கம்
- பிரிகேடியர் ஜெயம் வீரவணக்கம்
- வீரத்தளபதி பிரிகேடியர் சொர்ணம் வீரவணக்கம்
- பிரிகேடியர் சசிக்குமார் வீரவணக்கம்
- கவச அணி நாயகன் லெப் கேணல் சிந்து.
- கேணல் வசந்தன் வீரவணக்கம்
- செயற்திறன் மிக்க தளபதி லெப் கேணல் விநாயகம்
- விடுதலைப்போராளி இசைப்பிரியா…
- பிரிகேடியர் மணிவண்ணன் வீரவணக்கம்
- தலைவரின் சிந்தனைக்குச் செயல் வடிவம் கொடுத்தவர் பிரிகேடியர் விதுசா
- பிரிகேடியர் துர்க்கா வீரவணக்கம்
- பிரிகேடியர் தீபன் – 25 ஆண்டு காலம் ஓயாது அடித்துக்கொண்டிருந்த புயல்
- கேணல் இளங்கீரன் வீரவணக்கம்
- 3 ம் ஆண்டு வீரவணக்கங்கள்
- முல்லைக் கடற்பரப்பில் டோறா மூழ்கடிப்பில் காவியமான கரும்புலிகள் வீரவணக்கங்கள்
- ஆட்டிலெறித் தளத் தாக்குதலில் 3 கரும்புலிகள் உட்பட 7 போராளிகளின் வீரவணக்கம்
- வான்கரும்புலிகள் வான் கரும்புலி கேணல் ரூபன், லெப்.கேணல் சிரித்திரன் வீரவணக்கம்
- தமிழீழ நிதிப் பொறுப்பாளர் பிரிகேடியர் தமிழேந்தி வீரவணக்கம்
சிறிலங்கா இராணுவத்தால் வெளியிடப்பட்ட விபரங்கள்