சிதைந்து போன ஈரோசை கட்டி எழுப்புவாரா சரவணபவானந்தன் துஸ்யந்தன்-ஈரோஸ் அமைப்புக்கு தனி வரலாறு உண்டு கவனத்தில் கொள்ளவேண்டும்

597

 

ஈரோஸ் பிரபாவின் அணியில் இருந்து பிரிந்து சென்ற துஸ்யந்தன் தலைமையில் தமிழ் தேசிய முன்னணி அங்குரார்ப்பணம்-

  


தமிழ் தேசிய முன்னணி என்னும் புதிய அரசியல் கட்சி வவுனியாவில் அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டுள்ளது. பூந்தோட்டம் மகாறம்பைக்குளம் வீதியில் உள்ள அலுவலகத்திலேயே apr 2013  இந்த அங்குரார்ப்பணம் இடம்பெற்றுள்ளது. புதிய அரசியல் வழிமுறைகளையும் இளைஞர், யுவதிகளுக்கான அரசியல் களத்தை அமைத்துக் கொடுத்தல் உள்ளிட்ட பல்வேறு கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு இக்கட்சி உருவாக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்வில் கட்சியின் சின்னம், கொடி என்பன காட்சிப்படுத்தப்பட்டதுடன், கட்சியின் பெயர்ப்பலகை உத்தியோகபூர்வமாக திரைநீக்கம் செய்து வைக்கப்பட்டுள்ளது.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினராக விருந்தவரும், புளொட் முக்கியஸ்தரும், 1998ஆம் (15.07.98) ஆண்டு வவுனியாவில் வைத்து புலிகளின் கிளைமோர் தாக்குதலில் படுகொலை செய்யப்பட்டவருமான சரவணபவானந்தன் சண்முகநாதனின் (வசந்தன்) சகோதரரான சரவணபவானந்தம் துஸ்யந்தன் என்பவர் இக் கட்சியின் தலைவராகவும், பொதுச் செயலாளராக பரமு செந்தில்நாதன், பொருளாளராக தர்மலிங்கம் சிறிதரன், கொள்கைப் பரப்பு செயலாளரும் ஊடகப் பேச்சாளருமாக நடராசா ஜனாதீபன் (ஜனகன்), தேசிய அமைப்பாளராக பரராசசிங்கம் ரோன் கனிசியஸ், இளைஞர் அணி செயலாளராக விநாயகமூர்த்தி சசிதரன், உபதலைவராக வேலுப்பிள்ளை நகுலேஸ்வரன், துணை பொதுச் செயலாளராக கணபதிப்பிள்ளை கஜேந்திரன் ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி (புளொட்) இன் வன்னிப் பாராளுமன்ற உறுப்பினராக விருந்தவரும், புளொட் முக்கியஸ்தருமான சரவணபவானந்தன் சண்முகநாதனின் (வசந்தன்) சகோதரர் எனும் காரணத்தினால் இந்த கட்சியின் தலைவரான சரவணபவானந்தன் துஸ்யந்தன் முன்னைய பாராளுமன்ற தேர்தலின் போது புளொட் (ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி) சார்பில் வன்னி மாவட்டத்திற்கு போட்டியிட்டவர்.

ஆயினும் இவர் ஈரோஸ் அபைப்பின் நீண்ட கால, நிரந்தர உறுப்பினர் என்பதும், சுவிஸ் நாட்டில் இருந்து இலங்கை வந்து ஈரோஸ் அமைப்பை மீண்டும் (முன்னர் புலிகளால் தடை செய்யப்பட்டிருந்தது) ஆரம்பித்தவர்களில் ஒருவரான ஈரோஸ் பிரபாவுடன் இணைந்து செயல்பட்டவர் என்பதும், பின்னர் கருத்து வேறுபாட்டால் அங்கிருந்து வெளியேறியவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

அறிவு தெளிவு தேவை என்பதற்க்காக இவ்வரலாற்றை  தருகிறோம் இவ் இயக்கத்தை கூறுபோடும் வகையில் பலர் செயற்படுகிறார்கள் கோவணம் கட்டினாலும் கொள்கை மாறாதவனே ஒரு தலைவனாக இருக்கமுடியும் கட்சிவிட்டு கட்சிதாவி பிழைப்பு நடத்துகிறவர்கள். கொள்கையோடு இருதிவரை விடுதலைப்புலிகளுடன் இனைந்து செயற்ப்பட்ட வே .பாலகுமார் அவர்களையும் இந்த மாவீர் வாரத்தில் நிணைவு கூறுவதொடு ஈரோஸ் அமைப்பு எப்படி இருந்தது அதன் சிறப்பு பற்றியும் நாம் பார்ப்போம்

ஈழப்புரட்சி அமைப்பின் திட்ட பிரகடன மாநாடுகள்

1975ம் ஆண்டு லண்டனில் கருவெடுத்த ஈழப்புரட்சி அமைப்பு வடக்கு,கிழக்கு, மலையகம் உள்ளிட்ட பிரதேசங்களில் வாழும் தமிழ் பேசும் மக்களின் விடுதலை தேசிய இனப்பிரச்சினையின் கூர்மைக்குள் அமுங்கி பிற்போக்குத்தனங்களைக் கொண்ட புதிய அதிகாரவர்க்கங்களின் பிடிக்குள் ஈழவர்களின் விடுதலையானது சென்றுவிடக்கூடாது. மாறாக எம் சமூகத்தில் காணப்படும் தனியுடமை சமூக அமைப்பு தோற்றுவித்த சமூக ஒடுக்குமுறை,பெண் ஒடுக்குமுறை, ஏற்றதாழ்வு  போன்ற  உள்ளக  முரண்பாடுகளையும், அதன் போலித்தனங்களையும் களைந்து ஒரு புரட்சிகர தத்துவத்தை படைக்கவேண்டும் என்பதற்காக தனது அரசியல் பணிகளை ஸ்தாபகர் இரட்ணசபாபதி அவர்களின் கருத்திற்கமைய தாயகத்தினுள் ஆரம்பித்தது. அவ்வாறு செயற்பட ஆரம்பித்த ஈழப்புரட்சி அமைப்பு  தேவையான சந்தர்ப்பங்களில் திட்ட பிரகடன மாநாடுகளை கூட்டி தன் பாதையை செப்பனிட்டது. 1990 ஆம் ஆண்டு அமைப்பு கலைக்கப்படும் வரையில் ஐந்து திட்ட பிரகடன மாநாடுகள் நடத்தப்பட்டன. இங்கு முதல் நான்கு திட்ட பிரகடன மாநாடுகளையும் சுருக்கமாக பார்க்கலாம்.

முதலாவது திட்டபிரகடன மாநாடு 
இலட்சிய வேட்கையுடன் கருக்கொண்ட ஈழப்புரட்சி அமைப்பு அதே ஆண்டில் நவம்பர் 23 இல் தனது முதல் திட்டபிரகடனத்தை வெளியிட்டு தன் பாதையை தெளிவுப்படுத்தி அதன் வழியேதன் செயற்பாட்டைமேற்கொண்டது. ஈழவர்களின் இன்னலை சித்தாந்த அடிப்படையில் அனைத்துமக்களின் பிரச்சினையாக முன்வைத்து தீர்வுக்காண விழைந்த முதலாவது சரித்திர நிகழ்வின் முடிவில் வெளிவந்ததிட்டபிரகடனம் பிரதானமாக ஐந்து அம்சங்களை வெளிப்படுத்தி நின்றது. அப்பிரகடனங்கள் சுருக்கமாக கீழே…
1) தமிழ் பேசும் மக்களுக்கு நிரந்தரத் தீர்வு அவர்கள் வாழும் பகுதிக்குள் தேசிய அந்தஸ்தை (State hood) நிறுவுல்.
2) அத்தேசிய அந்தஸ்தானது மன்னார் முதல் மட்டக்களப்பு வரை, பருத்தித்துறை முதல் பதுளை வரை, பொத்துவில் உள்ளடங்கிய பிரதேசங்களாகும்.
3) பண்டைய பாட்டாளிகளென (Classical Proletariat) இனம் காணும் மலையக மக்களை உள்ளடக்கிய தீர்வினாலேயே ஈழம் நிதர்சனமாகும்.
4) ஒவ்வொரு போராட்டமும் வர்க்கப் போராட்டமே என்பதனை ஏற்றுக் கொண்டு அந்தவகையில் ஈழத்தின் போராட்டமும் வர்க்க அம்சத்தை உள்ளடக்கியது என்றும் அதன் காரணமாக மலையக மக்களை முன்னணியாகக் கொண்ட (Vanguard) போராட்டமாக அமைதல் வேண்டும்.
5) ஈழத்திற்கான போராட்டம் என்பது அனைத்து மக்களின் ஆயுதம் தாங்கிய போராட்டமாக அமைதல் வேண்டும்.
இரண்டாவது திட்டபிரகடன மாநாடு
முதலாவது திட்டபிரகடனமாநாட்டின் பிரகடனங்களுக்கு செயல் வடிவம் கொடுத்து செயற்பாட்டை முன்னெடுத்த ஈழப்புரட்சி அமைப்பு இரண்டாவது தடவையாக 1977 ம் ஆண்டு ஏப்ரலில் தனது இரண்டாவது பிரகடனத்தை வெளியிட்டுதன் பாதையை செப்பனிட்டது. கருவெடுத்த காலம் தொட்டு கருத்து ரீதியாக கட்டியெழுப்பப்பட்ட  அமைப்பை மக்கள் மயப்படுத்தும் திட்டத்தை இரண்டாவது மாநாடு உறுதியாக முன்னிறுத்தியதை கீழ்வரும் அதன் பிரகடனங்கள் வெளிப்படுத்துகின்றன.
1) ஈரோசின் செயற்பாடுகள் ஈழத்திற்குள் நிலை நிறுத்தப்படல் வேண்டும்
2) செயற்பாடுகள் பொருளாதார,அரசியல் இணைந்த திட்டங்களினூடாக அமைதல் வேண்டும்.
3) செயற்திட்டங்களில் பணியாற்றி பயிற்சி முடித்த தோழர்கள் ஈரோஸ் செயற்பாட்டை முன்னெடுத்தல் வேண்டும்
4) அரசியல் பொருளாதார திட்டங்கள் போராட்டத்தளங்களாக மாற்றப்பட வேண்டும்
5) ஈழத்திற்குள் போராடும் இயக்கங்களை அமைப்பின் கருத்துக்கமைய இணைத்திடல் வேண்டும்.
6) மேற்கூறப்பட்ட முறையில் முன்னெடுக்கப்படும் செயற்பாடுகளினூடாக தெரிவு செய்யப்படும் முதல் ஐம்பது தோழர்கள் பூரண இராணுவ பயிற்சி முடித்தபின் திட்டப் பிரகடன மாநாடு (Planary Session) நடத்தப்படும்.
7) ஈரோஸ் இயக்கமாக பரிணாமம் அடைந்து போராட்டத்தை முன்னெடுக்கும் என பிரகடனம் செய்யப்பட்டது.
மூன்றாவது திட்டபிரகடன மாநாடு 
1980 ஏப்ரலில் திருமலையில் நடந்த மூன்றாவது திட்டபிரகடன மாநாடு வெகுசன பணிகள் மூலமும் வெகுசனங்களிடையே பிரச்சார நடவடிக்கைகளை மேற்கொள்ளல், அமைப்பின் தோழர்களின் பொருளாதார நிலையை ஸ்தீரப்படுத்தல் என்பவற்றில் சிறப்பு கவனத்தை செலுத்தியது. இதன் பிரகடனங்களின் முக்கிய அம்சங்கள் பின்வருமாறு
1) ஈழத்தில் இயக்கச் செயற்பாட்டிற்கென சில அதிகாரங்களைக் கொண்டதான பொதுஆணைக்குழு ஒன்றை அமைத்தல்.
2) மட்டகளப்புப் பகுதியில் வேலை செய்வதற்காக அங்கு ஏற்பட்ட இயற்கைச் சீரழிவினைப் பயன்படுத்தி கூரைத் தகட்டுத் திட்டமொன்றை ஏற்படுத்தல்.
3) ஈழம் முழுவதற்குமான இயக்க ஊடகமாகவும், எமது பிரச்சினைகள் சம்பந்தமாக சித்தாந்த விளக்கமாகவும் ‘தர்க்கீகம்” என்ற பெயரில் மாத இதழ் ஒன்றை வெளியிடுவதெனவும், தமிழ் நாட்டிலிருந்து செயற்படுவதற்கு எமது ஊடகமாக சென்னையிலிருந்து ‘பொதுமை” என்ற இதழையும் வெளியிடல்.
4) தோழர்களின் அன்றாட சீவனப்பாட்டுக்காக சிறுபண்ணைத் திட்டங்களை செயற்படுத்தல்
நான்காவது திட்டபிரகடன மாநாடு 
கறுப்பு ஜீலைகலவரத்தின் பின் இனஒடுக்கலும், விடுதலைக்கான போராட்டமும் வளர்ந்த காலகட்டத்தில் சூழ்நிலைமைகளை கருத்திற் கொண்டு அமைப்பின் இலக்கு நோக்கிய செயற்பாடுகள் திட்டமிடப்பட்டதனை பின்வரும் நான்காவது மாநாட்டின் திட்டபிரகடனம்   வெளிப்படுத்துகின்றது. 1984  மார்ச்   22 இல்   ஈரோஸ் தனது நான்காவது பிரகடனத்தை வெளியிட்டது.
1) ஈழத்தில் இயக்கச் செயற்பாட்டிற்கென சில அதிகாரங்களைக் கொண்டதான பொதுஆணைக்குழு ஒன்றை அமைத்தல்.ஈழவர் போராட்டத்திற்குரிய சூழல் கனிந்திருக்கும் நிலையில் போராட்டத்துக்காக மக்களை தயார்படுத்தி இறுதிப் போராட்டத்திற்கு இட்டுச் சென்று இம்மக்களின் விடிவாகிய ஈழத்தை நிதர்சனமாக்கும் வகையில் அகச் சூழ் நிலைகள் அமையவேண்டும் என்பதற்கிணங்க ஈரோஸ் தனது கட்டமைப்புகளை மேலும் இறுக்கமானதாகவும், மக்களை இணைத்துக் கொண்டு போராடக் கூடியவகையில் செயற்படல் வேண்டும்.
2) ஈழப்போராட்டமானது வர்க்க குணாம்சத்தை உள்ளடக்கமாகக் கொண்டிருந்த போதும் தேசிய இனப்போராட்ட வடிவமே கூர்மையடைந்துள்ளது என்பதைக் கவனத்தில் கொள்ளும் இயக்கம் அப்போராட்ட முன்னெடுப்பில் முனைந்து செயலாற்றல் வேண்டும்.
3) கூர்மையடைந்து வரும் நெருக்கடிகளில் எதிரியின் அசுர முன்னேற்றத்தையும் தாக்குதலையும் எதிர் கொள்ள வேண்டிய அவசியம் கருதி இன்றையநிலையில் மற்றைய இயக்கங்களுடன் பேச்சுவார்த்தைகள் நடத்துவதற்கும் இராணுவக் கூட்டணி அமைப்பதற்கும் இயக்கம் தயாராய் இருப்பதுடன் தனித்துவம் பேணி ஒதுங்கி நிற்கும் இயக்கங்களை இவ் இணைப்புக்குள் கொண்டு வர முயற்சித்தல் வேண்டும்.
4) ஈழவர் போராட்டத்தில் எதிரியின் பக்கம் ஏகாதிபத்தியம் துணை நிற்குமென்பதை கணக்கிலெடுக்கும் எமது இயக்கம் எம்மை பலப்படுத்தும் திறன் கருதி நேசசக்திகளின் உதவிகளையும்,வசதிகளையம் வகையாகப் பெற்று ஆயுதம் தாங்கிய மக்கள் போராட்டம் ஒன்றை முன்னெடுக்கும்.
இவ்வாறு ஈழப் போராட்டத்தின் புரட்சிகர சக்தியாய் செயற்பட்டு வரும் ஈழப்புரட்சி அமைப்பு, ஐக்கியத்திற்கான போராட்டத்தில் ஆற்றியபங்கும், வெளிப்படுத்திய பண்பும் குறிப்பிடத்தக்கதும், இன்றைய செயற்பாட்டாளர்கள் யாவரும் குறித்து வைத்துக் கொள்ள வேண்டியதும் ஆகும். ஈழப்புரட்சி அமைப்பு திட்டபிரகடன மாநாடுகளினூடாக தன் பாதையை தொடர்ச்சியாக நெறிப்படுத்தியதோடு அனைத்து சக்திகளின் இணைப்பையும் பொதுஎதிரிக்கு எதிரான போராட்டத்தையும் கோட்பாடாக வலியுத்தி வந்துள்ளது. இன்று ஆரோக்கியமற்ற சக்திகளால் போராட்டம் திசைதிருப்பப்படும் நிலைமைகளில், போராட்டத்தை ஒரு முகபடுத்தி நேர் வழிப்படுத்தி கடந்தகால அர்ப்பணிப்புகள் வீண் போகாவண்ணம் போராட்டத்தை முன்னெடுக்க வேண்டிய அவசியபாட்டை உணர்ந்து செயற்பாட்டிற்கு வந்திருக்கும் ஈழப் புரட்சி அமைப்பின்  தோழர்கள் தடம் பதித்து வந்த பாதைகளில் மறையாது நிலைத்து நிற்கும் தடங்களை இன்றைய பயணத்திற்கு வழிக்காட்டியாக வழிப்படுத்தி கொள்வார்கள் என்பதும் திண்ணமே.

ஈரோசின் 5வது திட்டபிரகடன மாநாடு

சமூக மாற்றத்தை சமூக விடுதலையை இட்சியமாக கொண்டுள்ள எந்த அமைப்பும் தனது கொள்கையையும் பாதையையும் அவ்வப்போது சுயவிமர்சனத்திற்கும், சுய ஆய்விற்கும் உட்படுத்தி திடப்படுத்திக் கொள்ள வேண்டியது அவசியமானதாகும். இலட்சியத்துடன் கைக்கோர்த்த சகலரையும் இணைத்துக்கொண்டு அதனை செய்ய வேண்டியது மிகவும் முக்கியமானதாகும். அந்த வகையில் இலங்கை தமிழ் மக்களின் அரசியல் அபிலாசைகளை வென்றெடுக்க இலட்சியம் கொண்டு உருவெடுத்த அமைப்புக்கள் அனைத்தும் இதனை செய்தனவா அல்லது செய்கின்றனவா என்றால் இல்லை என்பதே பதில். ஆனால் ஈழவரின் விடுதலைக்காக மிகவும் முன்னேறிய தத்துவத்தின் வழிக்காட்டலில் புரட்சிகர மக்கள் சார் பாதையை தேர்ந்தெடுத்து பயணித்த ஈழப்புரட்சி அமைப்பு அதனை செய்து ஏனையவர்களுக்கு முன்னூதாரணமானது. இவ்வாறு முன்னுதாரணமாய் 1988 ஆம் ஆண்டு நடந்த ஈழப்புரட்சி அமைப்பின் ஐந்தாவது திட்ட பிரகடன மாநாட்டை நாம் அனைவரும் நினைவுபடுத்துவது இந்த காலக்கட்டத்தில் மிக பொருத்தமான விடயமாகும்.
ஈழப்புரட்சி அமைப்பு 1975 சனவரி 3ம் திகதி கருக்கொண்டு 1975 நவம்பர் 23 இல் முதல் பிரகடனத்தையும், 1977 ஏப்ரலில் இரண்டாவது பிரகடனத்தையும், 1980 ஏப்ரலில் மூன்றாவது பிரகடனத்தையும் 1984 இல் நான்காவது பிரகடணத்தையும் வெளியிட்டு தனது செயல்பாட்டை நெறிப்படுத்திக் கொண்ட ஈழப்புரட்சி அமைப்பு இறுதியாக 1988 ஆம் ஆண்டு ஐந்தாவது தடவையும் திட்ட பிரகடன மாநாட்டை நடாத்தி திட்ட பிரகடனத்தை வெளியிட்டு தன் பாதையை காலநிலைமைகளுக்கு ஏற்ப சீர்படுத்திக் கொண்டது.
1988 ஆம் ஆண்டின் மிகவும் சிக்கல் மிகுந்தச் சூழ்நிலையிலும் ஈரோஸ் தன் வழியை தெளிவு படுத்த நெறிபடுத்த திட்டப்பிரகடன மாநாட்டைக் கூட்டி, வெற்றிகரமாக முடித்தது. திட்ட பிரகடன மாநாடு ஐந்து அரங்குகளாக நடைப்பெற்றது. முதலாவது அரங்கு கருத்தரங்காக இடம்பெற்றது. கருத்தரங்கில் ‘தமிழ் பேசும் மக்களின் சமகால நிலைமைகளையும் எதிர்நோக்கிய பிரச்சினைகளும், வர்க்க பாகுபாடும் தமிழ் பேசும் மக்களும்” எனும் தலைப்பின் கீழ் மலையக மக்கள், இசுலாமிய மக்கள்,பெண்கள், மாணவர் இளைஞர் ஆகிய உட் தலைப்பிலும், தொழிற் சங்க அமைப்பின் சாத்தியம், போராட்டத்தில் கலை இலக்கியம், தேசிய இனப் போராட்ட நிலை, இலங்கை-இந்திய ஒப்பந்தமும் எதிர்காலமும் எனும் பல்வேறு பிரச்சினைகள் குறித்து ஆய்வுரைகள் நிகழ்த்தப்பட்டன.
இப்பொருள்கள் பற்றி பல்வேறு அறிவுத் துறையைச் சார்ந்தவர்கள் பங்கேற்ற கருத்தரங்குகள் முன்கூட்டியே ஆய்வு நிறுவனம் சார்பில் நடத்தப்பட்டு, அவற்றில் பதியப்பட்ட கருத்துக்கள் திட்ட பிரகடன மாநாட்டில் பரீசீலித்து விவாதிகப்பட்டன.ஆய்வு நிறுவனம் சார்பில் நடைபெற்ற இவ்வகைக் குழுநிலை விவாதக் கருத்தரங்குகளில் சபாஜெயராசா, சண்முகதாஸ், செம்பியன் செல்வன், நீர்வை பொன்னையன், அண்ணாமலை, சிவா சுப்ரமணியம், குகதாசன், ஐ.தி. சம்பந்தன், இரா.சிவச்சந்திரன், திருமதி. சிவச்சந்திரன், சண்முகலிங்கம்,பேராசிரியர் சிவத்தம்பி, கலாநிதி சோ. கிருஸ்ணராஜா, பேராசிரியர் பாலகிருஸ்னன், நேசன், எம்.ஏ.நுமான், இக்பால், திவகலாலா, சுந்தர், பார்வதி கந்தசாமி, செல்வி சுமங்கலா கைலாசபதி, திருமதி கைலாசபதி, செல்வி நாளாயினி, செல்வி அருந்ததி, பேராசிரியர் பாலசுந்தரம் பிள்ளை ஆகியோர் பங்கேற்றனர்.
ஈரோசின் 5வது திட்ட பிரகடன மாநாடு 1988 ஆம் ஆண்டு செப்டம்பர் 25 ஆம் திகதி தொடங்கி அக்டோபர் 20 ம் திகதி வரை நடைபெற்றது. இந்த திட்டப்பிரகடன மாநாட்டில் மலையகம், அம்பாறை, மட்டு நகர், மூதூர், திருமலை, முல்லைத்தீவு, மன்னார், யாழ்ப்பாணம் என பகுதி வாரியாக அதுவரைக்காலமும் நடைபெற்ற இயக்க செயற்பாடுகள் விமர்சனத்திற்கு ட்படுத்தப்பட்டன.
இந்த திட்டப் பிரகடன மாநாட்டிற்கு ஜெர்மனி, பிரிட்டன், பிரான்ஸ் ஆகிய நாடுகளின் அப்போதைய வெளிநாட்டுக் கிளைகளிலிருந்து முறையே சிங்கம், குகன், அழகிரி ஆகியோர் கலந்துகொண்டிருந்தனர். திட்டப் பிரகடன மாநாட்டில் ‘அமைப்பின் உறுப்பினர்களும் அமைப்பும் அது வரை வர்க்கச் சார்பற்ற சமூகப் பிரதிநிதிகளால் சூழப்பெற்றதாக இருந்தமைக்கு சுயப் பொறுப்பேற்றுக் கொண்டு இனி வர்க்கச் சார்பு நிலைக்கு மாற வேண்டிய அவசியத்தை உணர்ந்து அதனை உரைத்து புதிய அணுகுமுறை தெளிவுபடுத்தப்பட்டது.
அத்தகைய சுயவிமர்சனத்தின் மூலம், போர்க் குணாம்சத்தோடு கூடிய மலையகத் தோட்டத் தொழிலாளர்களே போராட்டத்தின் முன்னணி சக்தி என்றும், வடக்கு கிழக்கில் விவசாயத்துறை சார்ந்த கூலித் தொழிலாளர்களாக வாழ்ந்து, நிலவுடமையாளர்pன் மறைமுக ஒடுக்கு முறைக்குட்பட்டு, தொழில் வாய்ப்புக்களுக்காக இடத்துக்கிடம் மாறி கிராமத்தன்மையோடு பரந்து பட்டு வாழும் இவர்கள் போராட்டத்தின் மறைமுக சக்தி என்றும், இனப்பிரச்சினைகளிலும்,வர்க்கப் பிரச்சனைகளிலும் நிகழ்வுறும் போராட்டத்திற்கு ஆதரவு நல்கிடும் இளைஞர்கள் குட்டிமுதலாளித்துவ பகுதியிலிருந்து வருபவர்கள். குடாநாட்டிலும் ஏனைய நகர்புறங்களிலும் வாழும் இந்த இளைஞர்கள் போராட்டத்தின் ஆதரவு சக்தி என்றும் பிரகடனபடுத்தியது.
போராட்டத்திற்குரிய முன்னணி சக்தி, மறைமுக சக்தி, ஆதரவு சக்தி எனும் மூவகையினருடைய பிரதிநிதிகளையும் ஈழப்புரட்சி அமைப்பு செயல்படும் சக்தியாக தன்னுள் இணைத்து இளைஞர் இயக்கமாக இருந்த ஈரோஸ் மக்கள் இயக்கமாக தன்னை மாற்றி அமைத்துக் கொள்ளும் என்றும் அறிவித்தது.
தமிழ் மக்களின் பாராம்பரிய பிரதேசத்தில் நில அபகரிப்பு நோக்கில் கேந்திரத்தன்மை பார்த்து நிறுவப்படும் சிங்களக் குடியேற்றங்களைத் தமிழ் பேசும் மக்களின் பிரதானப் பிரச்சினையாக முன்மொழிவது, தமிழ்பேசும் மக்களை வலுவிழக்கச் செய்யும் நடைமுறைகளைக் கையாளும், சிங்கள மேலாதிக்கச் சக்திகளையே பொது எதிரியாக இனங்காட்டுவது என்று அரசியல் கொள்கை நிலையை ஈரோஸ் எடுத்துரைத்தது. பெருந்தோட்டப் பொருளாதாரம் கிராமியப் பொருளாதாரம், நகர்ப்புறப் பொருளாதாரம் என்று பொருளியல் கட்டமைப்பை வகைப்படுத்தி பெருந்தோட்டப் பொருளாதாரம் நிலவும் மலையகப் பகுதிகள் போராட்டத் தளமாகவும், கிராமியப் பொருளாதாரம் நிலவும் வடக்கு கிழக்குப் பகுதிகள் ஆதரவுத்தளமாகவும், நகர்ப்புற பொருளாதாரத்தைச் சார்ந்த பகுதிகள்  தேசிய  அரசியலை  கையாளும் புலமாகவும் கருதிச் செயல்படும் கொள்கை அரசியலை ஈழப்புரட்சி அமைப்பு முன்வைத்தது. சமத்துவ சமதர்ம ஆட்சி முறை கொண்ட கட்டமைப்பே தமிழ் பேசும் மக்களின் பிரச்சினைகளுக்கு இறுதித் தீர்வாகவும் இந்தத் தீர்வை அடைய பல படி நிலைப் போராட்ட முன்னெடுப்புக்களையும் ஈரோஸ் அறிவித்தது.வடக்குக் கிழக்கில் அரசியல் அதிகாரத்தை கையாளுவதன் மூலம் மலையக மக்களின் ஆதரவுத் தளத்தை அமைத்தல், வடக்கு கிழக்கு மலையக இணைப்பிற்குரிய உள்ளகக் கட்டமைப்பு ஒன்றை நிறுவுவதற்கு வகை செய்தல் என்ற படி நிலை போராட்ட அறிவிப்பையும் முன்வைத்தது.
மாநாட்டிற்கு பிரதிநிதிகளாக வந்தவர்கள் ‘ஈழப் புரட்சி அமைப்ப முன்மொழியும் கொள்கை கோட்பாடுகளுக்கும், செயல் திட்டங்களுக்கும் அவற்றுக்கான அமைப்பு வடிவத்திற்கும் திரிகரண சுத்தியாய் இருப்பேன் என்றும் அதன் முடிவுகள், கட்டுப்பாடுகள் அனைத்தையும் உளப் பூர்வமாக ஏற்பேன் என்றும் ஈழப் புரட்சி  அமைப்பின் பணிகளை ஆற்றும் தோழராக உங்கள் முன்னிலையில் உறுதி ஏற்கிறேன்” எனும் உறுதி மொழிகளை ஏற்றனர்.ஈழப்புரட்சி அமைப்பின் நிறுவனர் தோழர் இ.இரத்தினசபாபதி முதன் முதலில் உறுதி மொழி ஏற்றார். உறுதி மொழி ஏற்ற ஏனைய பிரதிநிதிகளுக்கு மாநாட்டுப் பதக்கங்களை இரத்தின சபாபதி அணிவித்தார்.
அதனை தொடர்ந்து புதிய முப்பது பேர் கொண்ட பொதுக்குழுவும் தேர்வு செய்யப்பட்டது. கொள்கைத் தீர்மானம் ஆகிய முடிவுகள் எடுக்கும் பொறுப்பு கொண்டதாக புதிய பொதுக் குழு விளங்கும்.பொதுக் குழுவிலிருந்து ஒரு நிறைவேற்றுச் செயலாளர் உட்பட 11 பேர் கொண்ட மத்தியக் குழுவும் தேர்வு செய்யப்படும் எனும் அறிவிப்போடு மாநாடு நிறைவு பெற்றது. ஆம்! அன்று நடந்த வெற்றிகர மாநாடு அன்று போல் இன்றும் எமக்கு சில வரிகளை உரக்க ஒலிக்க செய்கிறது.

ஈரோசின் கன்னித் தேர்தல்

1975 ஆம் ஆண்டு லண்டனில் கருக்கொண்டு தாயகத்தினுள் கால்பதித்த ஈரோஸ் அமைப்பு 1989 ஆம் ஆண்டு முதல் முறையாக தேர்தலில் பங்குபற்றியதோடு, அத்தேர்தலில் சுயட்சையாக போட்டியிட்டு வடகிழக்கில் 31 ஆசனங்களில் 12 ஆசனங்கள் மற்றும் தேசிய பட்டியல் ஆசனம் அடங்கலாக 13 ஆசனங்களை வெற்றிக்கொண்டது. 1989ஆம் ஆண்டு தேர்தலானது, 1978ஆம் ஆண்டின் அரசியல் யாப்பின் பிரகாரம் விகிதாசார முறையில் இடம்பெற்ற முதலாவது தேர்தலாகும். 1983 ஆம் ஆண்டு ஜேஆர் ஜெயவர்த்தன தேர்தலை நடத்தாமல் பொதுகருத்துக்கணிப்பு மூலம் ஆட்சியை நீடித்துக்கொண்டதாலே, விகிதாசார தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டு, 11 வருடங்களின் பின் முதல் தேர்தல் நடைப்பெற்றது. இத்தேர்தல் நடைப்பெற்ற காலக்கட்டமானது அமைதிபடை என்ற பெயரில் இந்திய ஆக்கிரமிப்பு படையின் அட்டூழியமும், ஜேவிபியின் இரண்டாவது கிளர்ச்சியும் நடந்த காலக்கட்டமாகும். அதே நேரம், விடுதலைப்புலிகளும், ஜேவிபியும் தேர்தலை புறக்கணிக்குமாறு மக்களை கோரியிருந்தார்கள்.
இக்காலப்பகுதியில் வடகிழக்கு மாகாண சபையில் ஈபிஆர்எல்எப் அமைப்பு அடாவடி ஆட்சி நடத்தியது. மலையகத்தமிழர்கள் பலர் பிரசாஉரிமை அற்றவர்களாக இருந்தார்கள். இத்தகைய சூழ்நிலையிலேயே ஈரோஸ் அமைப்பின் தேர்தல் பிரவேசம் இடம்பெற்றது. இத்தேர்தலில் தமிழர் விடுதலைக்கூட்டணி, ஈபிஆர்எல்எப், ரெலோ, ஈஎன்எல்எப் ஆகியன கூட்டடுச்சேர்ந்தும், அகிலஇலங்கை தமிழ் காங்கிரசு, சிறிலங்கா முசுலிம் காங்கிரசு, புளோட் ஆகிய கட்சிகள் தனித்தும் போட்டியிட்டன. மேலும் ஐதேக சிறிலங்காக சுதந்திரக் கட்சி ஆகிய கட்சிகளும் போட்டியிட்டன.
ஈரோஸ் அமைப்பு யாழ்ப்பாணம், வன்னி, திருகோணமலை, மட்டகளப்பு ஆகிய மாவட்டங்களில் போட்டியிட்டது. அன்றைய காலகட்டத்தில் ஆழமாக தடம்பதித்திருந்த மலையகத்தில் சூழ்நிலைகளை கருத்திற்கொண்டும், அம்பாறை மாவட்டத்தில் இசுலாமியர்களின் தனித்துவத்துடன் போட்டி போடக்கூடாது என்பதாலும் ஈரோஸ் அமைப்பு போட்டித் தவிர்ப்பை செய்திருந்தது.
ஈரோஸ் அமைப்பு ஈழவர் சனநாயக முன்னணி என்ற பெயரில் வெகுசன அணியை உருவாக்கி இருந்தாலும், அப்போது கட்சி பதிவு செய்யபபட்டிராததால் சுயட்சை அணியாக தேர்தலில் பங்குபற்றியது. தேர்தலின் பின்னர் ஈழவர் சனநாயக முன்னணி தேர்தல் திணைக்களத்தில் அரசியல் கட்சியாக பதிவுபெற்றது. மிககுறைந்த காலஅவகாசத்திலும், பல இடையூறுகளிற்கு மத்தியிலும், ஈரோஸ் தோழர்கள் வீடுவீடாகச்சென்று மக்களை அணுகி தம் நிலைப்பாட்டை தெளிவு படுத்தியதின் மூலம் மக்களை சக்தி வாய்ந்த பிரச்சார ஊடகமாக மாற்றினார்கள். அதே போல் ஆடம்பரமான பிரச்சார விளம்பரங்களையும், பகட்டாரவாரமான அரசியல் பிரகடனங்களையும் நிராகரித்து, தமிழ் மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் குறித்து நன்கு சிந்தித்து அவற்றை தீர்ப்பதற்கான ஒரு திட்டவட்டமான வழிமுறைகளை துண்டுபிரசுரம் மூலம் தேர்தல் பிரகடனமாக தெரியப்படுத்தினார்கள்.
1989 பெப்பரவரி 15, தேர்தல் முடிவுகள் வெளியாகிய பின் ஆத்தரமடைந்த ஈபிஆர்எல்எப் அமைப்பினர் ஈரோஸ் தோழர்களையும், ஆதரவளித்த மக்களையும் ஆயுதம் கொண்டு கண்மூடித்தனமாக தாக்கி கொலைசெய்தும், தாக்கிக் காயப்படுத்தியும் இருந்தார்கள். தேர்தலில் வெற்றி பெற்ற பின்னர் ஈரோஸ் உறுப்பினர்கள் இலங்கை அரசியலமைப்பின் ஆறாவது சீர்த்திருத்தத்தை நீக்கவேண்டும், அரசியல் சிறைக்கைதிகளை விடுவிக்க வேண்டும், தமிழ் தேசிய பிரச்சினைக்கு இராணுவ தீர்வை நாடக்கூடாது என கோரிக்கைகளை முன்வைத்து நான்கு மாதங்கள் பாராளுமன்றத்தை பகிஸ்கரித்திருந்தார்கள். பின்னர் அப்போதைய சனாதிபதி பிரேமதாசவுடன் நடத்திய பேச்சுவாhத்தையில் எட்டிய இணக்கப்பாட்டின் பேரில் ஈரோஸ் உறுப்பினர்கள் பாராளுமன்ற பிரவேசம் செய்திருந்தார்கள். பாராளுமன்ற பிரவேசத்தின் பின் 1987 ஆம் ஆண்டு ஜீலை 21ஆம் நாள் அமைப்பின் ஸ்தாபகர் தோழர் இரத்தினசபாபதி விசேட பாராளுமன்றத்தில் சிறப்புரை ஆற்றினார். எனினும் 1990 ஆம் ஆண்டு ஈரோஸ் உறுப்பினர்களுக்கு வழங்கிய உறுதிமொழிகளை மீறி இராணுவத்தீர்வில் அரசு நாட்டம் கொண்டதால், ஈரோஸ் உறுப்பினர்கள் நாடளுமன்ற பதவிளை துச்சமென துறந்திருந்தார்கள்
வேட்பாளர்கள் யார் என்ற விபரம் கூட சரியாக அறிவிக்கப்படாமல், விடுதலைப்புலிகளின் தேர்தல் பகிஸ்கரிப்பின் கோரிக்கையின மத்தியிலும், வடகிழக்கு மாகாணத்தில் ஆட்சி நடத்திய ஈபிஆர்எல்எப் அமைப்பு இந்திய ஆக்கிரமிப்பு படையுடன் இணைந்து நடத்திய அராஜகங்களுக்கு மத்தியிலும், மக்களின் அமோக ஆதரவை பெற்றமையானது அனைத்து தரப்பாலும் ஆச்சரியத்துடன் நோக்கப்பட்டது. வேட்பாளர்கள் யார் என்று அறியாத காரணத்தினால், பெரும்பாலான வாக்குகள் அமைப்பின் சின்னத்திற்கு மாத்திரம் அளிக்கப்பட்டிருந்தமையும் இங்கு குறிப்பிடதக்கது.
மக்கள் விரும்பிய, மக்களை மதித்த, மக்களுடனும் ஏனைய அமைப்புக்களுடனும் சகோதரத்துவத்தை பாராட்டிய ஈரோசின் பண்பாடும், கொள்கை பற்றுமே மக்களின் அமோக ஆதரவை பெற்று தந்ததாக சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டின.
இத்தேர்தலில் தமிழ் சமூகத்தின் பாராம்பரிய சனநாயக தலைவர்கள் பலர் தோல்வியடைந்தமையும் குறிப்பிடதக்கதாகும்.  முன்னைய பாராளுமன்றத்தில் உறுப்பினர்களாகவிருந்த தமிழர் விடுதலைக் கூட்டணியை சேர்ந்த ஏ.அமிர்தலிங்கம், எம்.சிவசிதம்பரம், வி.யோகேஸ்வரன், வி.ஆனந்தசங்கரி, ஆர்.சம்பந்தன், சூசைநாதன் ஆகியோரும், அமைச்சரவை அமைச்சராகவிருந்த தேவநாயகமும் மக்களால் தோற்கடிக்கபபட்டவர்கள் ஆவார்கள்.
தேர்தல் முடிவுகளின் படி யாழ் மாவட்டத்திலிருந்து முறையே இளையதம்பி இரட்னசபாபதி 40947 , இளையதம்பி பரராஜசிங்கம்36340, சின்னதம்பி சிவமகாராசா 22622, அருணாசலம் பொன்னையாசெல்லையா 20747, தம்பு லோகநாதபிள்ளை 17616, செபஸ்டியம்பிள்ளை எட்வர்ட் 17429, கணபதி செல்வநாயகம் 14440, ஜோசப்ஜோர்ஜ் ராஜேந்திரம் 13948 விருப்பு வாக்குகளுடனும், வன்னி மாவட்டத்திலிருந்து இன்னாசிமுத்து அல்பிரட் 935 விருப்பு வாக்குகளுடனும், மட்டக்களப்பிலிருந்து அழகுபொடி குணசீலன் 22889,  விருப்பு வாக்குகளுடனும், திருக்கோணமலையிலிருந்து முறையே சிவபிரகாசம் ரட்னராஜா 784, கோணமலை மாதவராஜா 575 விருப்பு வாக்குகளுடனும் வெற்றி பெற்றார்கள்.
ஈபிஆர்எல்எப், ரெலோ, ஈஎன்எல்எப் ,தமிழர் விடுதலை கூட்டணி ஆகிய அமைப்புக்கள் இணைந்து தமிழர் விடுதலை கூட்டணியின் சின்னத்தில் வேட்புமனுதாக்கல் செய்யதிருந்தாலும், தனி த்தனியாகவே பிரச்சாரம் செய்தார்கள். கூட்டணி வெற்றிக்கொண்ட 11 ஆசனங்களில் 9 ஆசனங்களை ஈபிஆர்எல்எப் உம், ஒரு ஆசனத்தை ரெலோவும் வென்றது. கூட்டணியின் தேசிய பட்டியலில் அமிர்தலிங்கம் தெரிவாகியிருந்தார். இவரின் மரணத்தை தொடர்ந்து மாவைசேனாதிராசா  அவ்விடத்துக்கு நியமிக்கப்பட்டார்.
எனினும் நான்கு மாத பகிஸ்கரிப்பின் பாராளுமன்றத்திற்கு சென்ற போது, மூன்று மாதகாலங்கள் தொடர்ச்சியாக பாராளுமன்றத்திற்கு வருகை தராததால் வெற்றி பெற்றவர்களின் உறுப்புரிமையை இரத்து செய்து, புதியவர்களை அவ்விடத்திற்கு நியமிக்குமாறு தேர்தல் திணைக்களம் கோரியதற்கமைய, முன்னர் வெற்றி பெற்ற இரட்னசபாபதி, பரராஜசிங்கம், செபஸ்டியம்பிள்ளை எட்வர்ட், கணபதி செல்வநாயகம், சின்னதம்பி சிவமகாராசா, அழகுபொடி குணசீலன், சிவபிரகாசம் இரட்ணராசா ஆகியோருடன் முன்பு தெரிவாகாதவர்களான பசீர் சேகுதாவுத், அஸீஸ்அமீர், சௌந்தர்ராஜன் , புவனசுந்தர்ராஜா ஆகியோரும் மலையகத்தின் சார்பில் இராமலிங்கம் சந்திரசேகரும் பாராளுமன்ற உறுப்பினர்களாக சத்தியபிரமானம் செய்துக்கொண்டார்கள்.
இதன் மூலம் அன்று பாராளுமன்றில் வடக்கு – கிழக்கு – மலையகத்தின் சார்பில் அதிக பிரதிநிதிகளை கொண்ட  தமி;ழ் பேசும் மக்களின் கட்சியாக திகழ்ந்தது.
SHARE