நாடெங்கிலும் உள்ள சிறைச்சாலைகளிலிருந்து ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் சிறைக்கைதிகள் விடுதலை செய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலையில் ஜனாதிபதியின் பொதுமன்னிப்பின் அடிப்படையில் 16 சிறைக்கைதிகள் இன்று காலை விடுதலைசெய்யப்பட்டனர்.
மட்டக்களப்பு சிறைச்சாலை அத்தியட்சகர் என்.பிரபாகரன் தலைமையில் இந்த சிறைக்கைதிகளை விடுதலைசெய்யும் நிகழ்வு இன்று காலை நடைபெற்றது. சிறு குற்றம் புரிந்த தண்டணைப் பணம் செலுத்தாத கைதிகளே இவ்வாறு விடுதலை செய்யப்பட்டனர்.