நடிகராக மட்டுமின்றி இயக்குனராகவும் தன்னை நிரூபித்து வருகிறார் தனுஷ். ஏற்கனவே இவர் இயக்கத்தில் வெளிவந்த பா. பாண்டி திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது..
இதன்பின், தற்போது தன்னுடைய 50வது படத்தை இயக்கி, நடித்து வருகிறார். இப்படத்திற்கு ராயன் என தலைப்பு வைத்துள்ளனர். இப்படத்தில் எஸ்.ஜே. சூர்யா, பிரகாஷ் ராஜ், சந்தீப் கிஷான், காளிதாஸ் ஜெயராம், அபர்ணா பாலமுரளி, துஷாரா விஜயன் உள்ளிட்ட பலரும் நடிக்கிறார்கள்.
பெரும் எதிர்பார்ப்பில் உருவாகி வரும் இப்படத்தை சான் பிச்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க, ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கிறார். சமீபத்தில் தான் இப்படத்தின் அனைத்து கதாபாத்திரங்களின் First லுக் போஸ்டர்கள் வெளிவந்தன.
சினிமாவில் அறிமுகமாகும் யாத்ரா
இந்நிலையில், ராயன் படத்தில் தனது மூத்த மகன் யாத்ராவை அறிமுகம் செய்ய போகிறாராம் தனுஷ். தனது தாத்தா, தந்தை, அம்மாவை போலவே யாத்ராவும் சினிமாவில் களமிறங்க போகிறார் என கூறப்படுகிறது. பொறுத்திருந்து பார்ப்போம் இதுகுறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எப்போது வெளியாகிறது.
ராயன் படத்தை தவிர்த்து தனுஷ் இயக்கத்தில் ‘நிலவுக்கு என்மேல் என்னடி கோபம்’ எனும் திரைப்படத்தையும் தனுஷ் இயக்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.