சிம்பு – கௌதம் மேனன் கைகோர்த்திருக்கும் படத்தின் தலைப்பு

586

தற்போது இயக்குனர் கௌதம் மேனன், அஜித் நடிக்கும் படத்தில் பிஸியாக இருக்கிறார் என்பது நமக்கு தெரியும்.

இப்படத்தை தொடங்குவதற்கு முன்பே கௌதம் மேனன், சிம்புவை வைத்து ஒரு படத்தை நீண்டநாட்களாக எடுத்து வருகிறார்.  இந்தப் படத்திற்கு முதலில் “சட்டென்று மாறுது வானிலை” என்று பெயர் வைத்ததாக கூறப்பட்டது. இது வாரணம் ஆயிரம் படத்தில் வரும் பாடலில் இடம் பெறும் பிரபலமான வரியாகும்.

இந்தத் தலைப்பை ஏற்கெனவே வேறு ஒருவர் பதிவு செய்துள்ளதால் தற்போது காற்று வாங்க போனேன் கவிதை வாங்கி வந்தேன் என்கிற எம்.ஜி.ஆர் பாடிய பாடல் வரியை படத்திற்கு தலைப்பாக வைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

சிம்பு வரிசையாக வாலு, வேட்டை மன்னன், இது நம்ம ஆளு, கௌதம் மேனன் இயக்கும் படம் என நடித்து வந்தாலும் இதுவரை ஒருபடங்கள் கூட ரிலீஸாகவில்லை. கடைசியாக இவர், நடிப்பில் ‘போட போடி’ படம் ரிலீஸானது. இப்படம் வெளியாகி இரண்டு வருடங்கள் ஆகப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE