சிம்பு படத்துக்கு எம்ஜிஆர் பாடல் வரியை டைட்டிலாக்கிய கெளதம்மேனன்!

468

நீதானே என் பொன்வசந்தம் படத்திற்கு பிறகு யோஹன் அத்தியாயம் ஒன்று என்ற படத்தை விஜய்யை வைத்து இயக்கயிருந்தார் கெளதம்மேனன். ஆனால், விஜய் முழுக்கதையையும் சொன்னால்தான் நடிப்பது பற்றி நான் முடிவு சொல்ல முடியும் என்று கண்டிசனாக சொன்னதால் அவர்களது கூட்டணி உடைந்தது.

அதையடுத்து, சூர்யாவை வைத்து படம் இயக்குவதற்காக பூஜையும் போட்டார் கெளதம். ஆனால், இவர் சொன்ன கதை சூர்யாவுக்கு பிடிக்காததால் கதையில் மாற்றம் செய்யச்சொன்னார். அதற்கு கெளதம்மேனன் உடன்படாததால் அந்த கூட்டணியும் உடைந்து போனது.

அதையடுத்துதான், சிம்புவை வைத்து ஒரு படத்தை ஆரம்பித்தார். அதற்கு சட்டென்று மாறுது வானிலை என்றுகூட பெயர் வைத்தார். ஆனால், அதே டைட்டிலை ஏற்கனவே ஒரு நிறுவனம் சேம்பரில் பதிவு செய்து வைத்திருப்பதை அறிந்ததும், வேறு டைட்டீலை ஆலோசித்து வந்த கெளதம்மேனன்,. இப்போது கலங்கரை விளக்கம் என்ற படத்தில், காற்று வாங்க போனேன் ஒரு கவிதை வாங்கி வந்தேன் என்று எம்.ஜிஆர் பாடிய அந்த பாடல் வரியை தனது படத்திற்கு டைட்டீலாக வைக்கப்போகிறாராம்.

இந்த டைட்டீல் சிம்புவுக்கும் ரொம்ப பிடித்து விட்டதாம்.அதனால் விரைவில் இதை அறிவிக்கவிருக்கிறார் கெளதம்.

SHARE