இந்த தாக்குதலுக்கு ஐ.நா.சபையும் உலகின் பல நாடுகளும் கடும் கண்டனம் தெரிவித்தன. இதனையடுத்து, ஐ.நா. சபையின் ஏற்பாட்டின் பேரில் சிரியாவிடம் இருந்த பயங்கர ஆபத்தை விளைவிக்கக் கூடிய ரசாயன ஆயுதங்களை கைப்பற்றி அழிக்க ஒரு குழு அமைக்கப்பட்டது.
இந்நிலையில், ‘சரின்’ எனப்படும் அதிபயங்கரமான நச்சு வாயுவை தயாரிப்பதற்கு தேவையான மூலப்பொருட்களை இங்கிலாந்து நாட்டில் உள்ள சில நிறுவனங்கள் சப்ளை செய்துள்ளதாக தற்போது தெரியவந்துள்ளது. இந்த தகவலை சிரியாவும் ஒப்புக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
1980-ம் ஆண்டுவாக்கில் பேராபத்தை விளைவிக்கக் கூடிய ரசாயன விற்பனை தொடர்பான இங்கிலாந்து நாட்டின் சட்டதிட்டங்கள் வலுவற்ற நிலையில் இருந்த போது அங்கிருந்து ரசாயன மூலப் பொருட்களை வாங்கிய சிரியா, அதை வைத்து தான் கடந்த ஆகஸ்ட் மாதம் நூற்றுக்கணக்கான மக்களை கொல்ல காரணமாக இருந்த ‘சரின்’ ஆயுதங்களை தயாரித்ததாக சமீபத்தில் வெளியாகியுள்ள இங்கிலாந்து அரசின் வெளியுறவு துறை அமைச்சகத்தின் பழைய கோப்புகள் உறுதிபடுத்தியுள்ளன.