சிரியாவின் வடபகுதியில் உள்ள அஜாஸ் நகரில் ராணுவம் நடத்திய ராக்கெட் குண்டு தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர்.
துருக்கி எல்லையில் உள்ள அலெப்போ மாகாணத்தின் சிறிய நகரமான அஜாஸ் நகரத்தின் கிழக்கு நுழைவாயிலில் ராணுவ ஹெலிகாப்டர்கள் மூலம் நேற்று காலை ராக்கெட் குண்டுகள் வீசப்பட்டதாக கண்காணிப்பு அமைப்பு தெரிவித்துள்ளது.
இதேபோல் திங்கட்கிழமை இரவு மரேயா நகரில் நடத்தப்பட்ட தாக்குதலில் 10 குழந்தைகள் உள்பட 13 பேர் இறந்ததாகவும் சிரியா மனித உரிமைகள் கண்காணிப்பு அமைப்பு கூறியது.
சிரிய ராணுவத்துடன் சென்ற புகைப்படக்காரர் ஒருவர், தெற்கு தாரா மாகாணத்தில் நடந்த தீவிரவாத தாக்குதலில் பலியானதாக சனா செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.