சிறப்பான தரமான சம்பவம்.. விக்ரம் பிறந்தநாளில் வெளிவந்த தங்கலான் படத்தின் புதிய டீசர்

98

 

ரசிகர்களால் சீயான் என கொண்டாடப்பட்டு வரும் நடிகர் விக்ரமின் 57 வது பிறந்தநாள் இன்று. இதை ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் #Thangalaan மற்றும் #HBDChiyaanVikram ஹேஸ்டேக் வெளியிட்டு கொண்டாடி வருகிறார்கள்.

விக்ரம் நடித்து முடித்துள்ள திரைப்படம் தங்கலான். பா. ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியுள்ள இப்படம் கேஜிஎப் பின்னணியில் நடக்கும் விஷயங்களை மையமாக வைத்து இப்படத்தை எடுத்துள்ளார் ரஞ்சித்.

தங்கலான் டீசர்
ஒவ்வொரு படத்திலும் வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்து நடிக்கும் விக்ரம், தங்கலான் திரைப்படத்திலும் இதுவரை இந்திய சினிமாவிலேயே யாரும் பண்ணாத கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

ஏற்கனவே இப்படத்திலிருந்து வெளிவந்த டீசர் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில், இன்று விக்ரமின் பிறந்தநாள் என்பதினால் தங்கலான் படத்திலிருந்து மேக்கிங் மற்றும் சில காட்சிகளுடன் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளனர்.

SHARE