சி.எஸ்.என். தொலைக்காட்சி தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள யோசித ராஜபக்ஸ உள்ளிட்ட ஐவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பகுதி விசேட வலயமாக்கப்பட்டுள்ளது.
யோசித உட்பட ஐவர் தடுத்து வைக்கப்பட்டுள்ள சிறைப்பகுதியில் குற்றச்செயல்களுடன் தொடர்புடைய கைதிகள் அகற்றப்பட்டுள்ளதாக சிறைச்சாலைகள் ஆணையாளர் எச்.என்.சீ.தனசிங்க தெரிவித்துள்ளார்.
இந்த சிறைப்பகுதிக்கு அருகில் உள்ள சிறையில் இருந்து கையடக்கத்தொலைப்பேசி ஒன்று கிடைக்கப்பெற்றுள்ளது. இதுவே, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட காரணம் என்றும் அவர் கூறியுள்ளார்.
இந்தநிலையில், பணச்சலவை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்ட யோசித உள்ளிட்ட ஐவரும் எதிர்வரும் 25ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.