சிறிய கை அசைவுகளையும் துல்லியமாக கண்டுபிடிக்கும் நவீன சாதனம்

469
தொடுதிரை தொழில்நுட்பத்தினைத் தொடர்ந்து கை அசைவுகளைக் கொண்டு சாதனங்களைக் கட்டுப்படுத்தும் தொழில்நுட்பமானது பிரபல்யமடைந்துவருகின்றது.இத்தொழில்நுட்பத்தினைக் கொண்ட சாதனங்களை உற்பத்தி செய்வதில் கூகுள் நிறுவனமும் முனைப்புக்காட்டி வருகின்றது.

இதன் ஒரு அங்கமாக சிறிய கை அசைவுகளையும் துல்லியமாக கண்டறியக்கூடிய வன்பொருளை (Hardware) சாதனத்தை Project Soli எனும் திட்டத்தினூடாக உருவாக்கியுள்ளது.

இச்சாதனமானது கை அசைவுகளை மட்டுமல்லாது விரல் அசைவுகளையும் உணரக்கூடியதாக இருத்தல் விசேட அம்சமாகும்.

இதேவேளை விரைவில் இப்புதிய தொழில்நுட்பத்தினை முற்றுமுழுதாகக் கொண்ட ஸ்மார்ட் சாதன வடிவமைப்பில் கூகுள் நிறுவனம் களமிறங்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

SHARE