சிறுபான்மை பெரும்பான்மை என்று சொல்லுவதை விட சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள் என்று சொல்வதில் என்ன தப்பு 15 கொள்கைகளை வாசித்து முடிந்ததும் தேசிய உணர்வேடு கிளந்து எழூந்த சிறிதரன் காத்திருங்கள்…….

448

 

சிறுபான்மை பெரும்பான்மை என்று சொல்லுவதை விட சிங்களவர்கள் குடியேற்றப்படுகிறார்கள்
என்று சொல்வதில் என்ன தப்பு 15 கொள்கைகளை வாசித்து முடிந்ததும் தேசிய உணர்வேடு

தமிழரசுக் கட்சியின் 15 ஆவது தேசிய மாநாட்டில்

கிளந்து எழூந்த சிறிதரன் MP

SAMSUNG CAMERA PICTURES

இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டில் வெளியிடப்படவிருந்த 15 தீர்மானங்கள் தொடர்பில் சிக்கல் தோன்றியுள்ளது. இலங்கை தமிழரசு கட்சியின் 15ஆவது பேராளர் மாநாட்டின் போது 15 தீர்மானங்கள், நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.எம்.சுமந்திரனால் இன்று (08) வாசிக்கப்பட்டன.

இதன்போது, அம்மாநாட்டில் கூடியிருந்த சிலர், தமிழர்களின் அபிலாஷைகளை உள்ளடக்கியதாக தீர்மானங்கள் எழுதப்பட வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.
இந்நிலையில் தீர்மானங்களில் பல மாற்றங்களை ஏற்படுத்தி, இன்று மாலை 3.30 மணிக்கு இடம்பெறவுள்ள பொதுக்கூட்டத்தில் வெளியிடுவது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பாக மத்தியகுழு உறு;பபினர் ஒருவர் கருத்து தெரிவிக்கையில்,

தமிழரசுக்கட்சியின் 15ஆவது தேசிய மாநாட்டை முன்னிட்டு கடந்த வெள்ளிக்கிழமை முதல் மத்தியகுழு, பொதுச்சபை என்பன கட்சியின் தீர்மானங்கள் தொடர்பான பல்வேறான கருத்துக்களை எடுத்தியம்பியிருந்தோம்.

தமிழ் மக்களின் அபிலாஷைகளை பிரதிபலிக்கும் வகையில் அவை அமையவேண்டும் என பலரும் கருத்து வெளியிட்டிருந்த நிலையில், கட்சியின் தலைமைகள் தாம் எழுதிய தீர்மானங்களில் எவ்வித மாற்றமும் இன்றி அவற்றை இன்று வெளியிட்டிருந்தது.

எனவே தான், அதனை நிராகரித்து மாற்றங்களை செய்யுமாறு வலியுறுத்தியுள்ளோம் என அவர் தெரிவித்தார்.

TPN NEWS

SHARE