சிறைச்சாலை என்பது குற்றங்கள் செய்த கைதிகளும், குற்றம் நிரூபிக்கப்படாத கைதிகளும், ஆயுள் கைதிகளும், மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதிகளும் உள்ளடக்கப்பட்டுள்ளன. இதில் குறிப்பாக தண்டனை நிரூபிக்கப்படாமல் 10 வருடங்களுக்கும் மேல் கைதிகள் இருக்கிறார்கள், பிணையில் வீடு செல்ல முடியாத கைதிகள் இருக்கிறார்கள், களவு, கொலை, கொள்ளை, கற்பழிப்பு, சிறு சிறு குற்றங்கள், விவாகரத்து, தாபரத்து வழக்கு என பல வகையாக பிரிக்கலாம். ஒரு சிறைச்சாலையில் தாக்குதல் நடத்தப்படும் பொழுது இதில் ஒட்டுமொத்த கைதிகளுமே தாக்கமடைகின்றார்கள். இதில் குறிப்பாக போதை வஸ்துக்களை சிறைச்சாலைக்குள் அனுமதிக்காது இருந்தாலே பாரிய குற்றங்களை தடுக்க முடியும்.
போதை வஸ்து வியாபார தளமாக ஒருசில அரசியல்வாதிகளின் பின்னணியுடனும் ஒருசில சிறைச்சாலை உத்தியோகத்தினர்களினதும் நடைமுறைகளினால் குறித்த சிறைச்சாலைக்குள் போதைப்பொருள் பாவனைகள் இடம்பெறுகின்றன. இதில் இங்க பாரியளவில் வியாபாரங்கள் நடைபெறுகின்றது என்றே கூறலாம். வெலிக்கடை சிறைச்சாலை சுவரில் ‘கைதிகளும் மனிதர்களே’ என்ற ஒரு வாசகம் எழுதப்பட்டிருக்கிறது. இவர்கள் மனிதர்களாக பார்க்கப்படுவதில்லை என்றே இன்றைய, அன்றைய சமூகங்கள் எடுத்துக்காட்டுகின்றது. கடந்த காலத்தில் குட்டிமணி, தங்கதுரை உட்பட பல கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலையில் கொல்லப்பட்டார்கள். அதனையே ஜீலை கலவரம் (1983) என்று கூறுவார்கள். மாறி மாறி வந்த அரசாங்கங்கள் ஒவ்வொன்றும் தமக்கு தேவைப்படுகின்ற விதத்தில் கைதிகளை கொல்லுகின்ற ஒரு நடவடிக்கையை ஒரு வன்முறை கலாச்சாரமாக தூண்டிவிட்டு கைதிகளை கொன்றொழித்தமையினால் அவர்களை சுட்டுக்கொன்றோம் என்று கூறுகின்றார்கள். அவ்வாறு இல்லாவிட்டால் வன்முறைகளை இல்லாது ஒழிக்க முடியாது என்பது அவர்களது கருத்து. கடந்த கால அரசாங்கத்திலும் தற்போதைய அரசாங்கத்திலும் சிறைச்hசலை கைதிகள் உண்ணாவிரதத்தை மேற்கொண்டால் அல்லது சிறைக்குள் ஏதேனும் கலவரத்தை தூண்டினால் அவர்களை கட்டுப்படுத்துவதாக நினைத்து அரசாங்கத்தால் இழக்கு வைக்கப்பட்ட ஆயுள் கைதிகளை மரண தண்டனை கைதிகளை அல்லது குடு வியாபாரிகளை திட்டமிட்டு கொல்லுகின்ற நடவடிக்கைகளை தற்பொழுது கோட்டபாய ராஜபக்ச அரசு கையில் எடுத்துள்ளது. இந்த வன்முறை கலாச்சாரம் மாற்றப்பட வேண்டம். நீதி சரியாக நிர்ணயிக்கப்பட வேண்டும். நீதியமைச்சரினுடைய கையில் அனைத்து பொறுப்புக்களும் வழங்கப்பட வேண்டும் நீதியமைச்சரை அரசாங்கம் ஒரு பகடைக்காயாக வைத்துள்ளது. அன்றைய நிதியமைச்சராக இருந்த ரவூக் ஹக்கீம் அவர்களையும் அரசாங்கம் ஒரு பகடைக்காயாகவே பயன்படுத்தியது. ஒரு நீதியமைச்சரினால் சரியான முடிவினை நாட்டுக்குள் எடுக்க முடியாது அந்த நீதியை நிலைநாட்ட முடியாது என்று பல சம்பவங்கள் இடம்பெற்றுக்கொண்டிருக்கிறது. இலங்கையின் சிறைச்சாலைகளுள் வெலிக்கடை, மெகசின், சீஆர்பி, போகம்பர, மஹர சிறைச்சாலைகள் பழமை வாய்ந்தவை. அதுமட்டுமன்றி கூடுதலான கைதிகளை அங்கு சிறைவைக்க முடியும். கூடுதலாக கைதிகள் பரிமாற்றங்களை இவ்வாறான சிறைச்சாலைகளுள்ளே ஏற்படுத்திக்கொள்வது வழக்கம். அனைத்து வசதிகளையும் கொண்ட சிறைச்சாலைகளாகவே இவை இருக்கின்றன. இதுபோன்ற சம்பவங்கள் வெலிக்கடை மற்றும் போகம்பர போன்ற சிறைச்சாலைகளில் கடந்த காலங்களில் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டு பல கைதிகள் இறந்திருக்கிறார்கள்.
ஆகவே கைதிகள் மீது துப்பாக்கி பிரயோகம் செய்தபொழுது சந்தேகத்தின் பெயரில் தடுத்து வைக்கப்பட்ட கைதிகளும் இறந்திருக்கிறார்கள். அதைவிட தண்டனை செய்கின்றவர்களை சவுதிஅரேபியா போன்று வெட்டியும் சுட்டும் கொல்லும் நடவடிக்கைகளை அரசாங்கம் மேற்கொள்ளலாம். சிறைச்சாலைகள் தொடர்பில் பல்வேறு தரவுகள் எம்மிடம் இருக்கிறது. சில பாதுகாப்பு காரணங்கள் கருதி நாம் அதனை இங்கு வெளியிடவில்லை. எவ்வாறு போதைப்பொருள் சிறைச்சாலைக்குள் கொண்டு செல்லப்படுகின்றது, எவ்வாறு தொலைபேசிகள் சிறைச்சாலைக்குள் கொண்டு செல்லப்படுகின்றது, எவ்வாறு பணம் சம்பாதிக்கிறார்கள், ஒரு கைதி சிறைச்சாலைக்குள் எவ்வளவு பணம் கொடுத்து அதற்குள் இருக்கின்றார்கள் என்ற தொடர்பிலும் பல்வேறு ஆதாரங்கள் எம் கைவசம் இருக்கின்றன. அவற்றையெல்லாம் வெளியிட்டால் ஏதேனும் ஒரு சம்பவங்களில் குற்றங்களை செய்து சிறைச்சாலைக்குள் செல்பவர்கள் அங்கு இருக்கக்கூடிய சலுகைகளை பெற்றுக்கொள்ள முடியாது என்ற காரணத்தினால் நாம் ஏனைய விடயங்களை வெளிக்கொண்டுவர விரும்பவில்லை. அது கைதிகளுக்கு ஓரளவு மனநிறைவை கொடுத்தாலும் போதைப்பொருள் சம்பந்தமான விடயத்தை இங்கு கூறக்கொள்ள விரும்புகின்றேன். புறா, பூனை, எலி போன்றவற்றினூடாக சிறைச்hசலைக்குள் குடு தற்பொழுது கொண்டுவரப்படுகின்றது. வளர்க்கப்பட்ட புறாக்கள் எலி பூனை போன்றவை இருக்கின்றன. வெலிக்கடை சிறைச்சாலையில் சப்பல் என்ற பகுதி இருக்கிறது. அதன் கீழ்த்தட்டில் மரண தண்டனை கைதிகள், ஆயுள் கைதிகள் என்பவர்கள் இருக்கின்றார்கள். அவர்கள் குடு வியாபாரத்தின் மூலம் சிறையில் அடைக்கப்பட்டவர்கள். இவர்கள் தொடர்ந்தும் அங்கு தமது வியாபாரத்தை செய்து பணங்களை ரீலோட் மூலம் வெளியில் அனுப்பி அல்லது அங்கு பணிபுரியும் சிறைச்சாலை அதிகாரிகளை பயன்படுத்தி பணப்பரிமாற்றங்கள் செய்து கொள்கிறார்கள். இவர்களை ஒரு நாளைக்கு ஒரு மணித்தியாலயம் மட்டுமே வெளியில் விடுவார்கள். ஏனைய நேரங்கள் எல்லாம் குறித்த சிறைச்சாலைக்குள்ளேயே இருக்க வேண்டும். கூடுதலான சிறைக்கைதிகள் விரக்தியின் விளிம்பிலேயே இருப்பார்கள். விசாரணைகளுக்கு எடுத்துக்கொள்ளப்படாமலேயே 25 வருடங்களுக்கும் மேல் சிறைத்தண்டனைகளை அனுபவித்து வருகின்றார்கள். குடுத்தொழில் செய்பவர்களுக்கு அரசாங்கம் மரண தண்டனையை வழங்குவதனூடாக இந்த நாட்டில் இதனை கட்டுப்படுத்த முடியும். அல்லது அதனுடன் தொடர்புபட்ட அரசியல்வாதிகள் பெரும் புள்ளிகளை மறைமுகமாக கொலை செய்வதனூடாக அப்பாவி பொதுமக்கள் பாதிக்கப்படாது தப்பித்துக்கொள்ள முடியும். சிறைச்சாலைக்குள் போதைகளின்றி இருக்க முடியாத ஒரு சூழ்நிலையினால் சிறைச்சாலைக்குள் புதிதாக செல்பவர்களுக்கு முதற்கட்டமாக இந்த போதை இலவசமாக வழங்கப்படுகின்றது. அதை குடித்து ருசிகண்டவர்கள் அதை குடிக்காமல் இருப்பது மிகக்கடினம். இதனால் பல குடும்பங்கள் சீரழிந்துபோயுள்ளன. சிறைச்சாலையில் இருந்து தங்களது வீட்டிற்கும் மனைவிக்கும் தொலைபேசியினூடாக தொடர்பு கொண்டு ரீலோட் போடுவதனூடாக அதனுடன் பணத்தை பெற்றுக்கொண்டு அந்த பணத்திற்கு சிறைச்சாலைக்குள்ளேயே குடு அடிக்கிறார்கள். இவ்வாறான செயற்பாடுகள் தொடர்ந்தும் இடம்பெற்றுவருகின்றது. லோக்கல் என்று கூறப்படுகின்ற புகையிலையை அரைத்து அதனை பேப்பரில் சுத்தி பாவிக்கின்றார்கள், தேயிலையை போதையாக பாவிக்கின்றார்கள், பைத்தியக்காரர்கள் பாவிக்கின்ற மாத்திரைகளை அதிகளவு சிறைச்சாலைக்குள் பெற்று அதனை அரைத்து தமது உடலுக்குள் ஏற்றி போதையை ஏற்படுத்திக்கொள்கிறார்கள், சம்போவை குடித்து போதையை ஏற்படுது;திக்கொள்கிறார்கள், ஓடிக்கலோன் போன்ற பொருட்களும் இவர்களுக்கு போதையாக அங்கு மாறுகின்றது. கஞ்சாக்களும் சிறைச்சாலைக்குள் கொண்டுவரப்படுகின்றது. திட்டமிட்டு மனிதர்களை தொடர்ந்தும் வன்முறையாளர்களாக சித்தரிக்கின்ற ஒரு நடவடிக்கையாகவே இதனை காணமுடிகின்றது. இதற்கு கோட்டபாய ராஜபக்சவினுடைய அரசாங்கம் தகுந்த நிலைப்பாட்டை எடுக்க வேண்டும். இதற்கு ஒருபோதும் ஒத்துழைப்பு வழங்ககூடாது. இன்று மக்கள் மத்தியில் சிறைச்சாலையில் இருக்கக்கூடிய அப்பாவி மக்களை இந்த அரசு கொல்லுகின்றது என்ற நிலைப்பாடு தோற்றம் பெற்றுள்ளது.
ஆகவே அரசாங்கம் உடனடியாக சிறைச்சாலை கைதிகளை சக மனிதர்களாக எண்ணி அவர்களை பாதுகாக்கும் நடவடிக்கைகளை உடன் மேற்கொள்ள வேண்டும் என்பதனையே நாம் இங்கு தெளிவுபடுத்துகின்றோம்.