பெங்களூர் சிறைச்சாலையில் இருந்தபடி பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சர்கள் பதவியேற்பு விழாவை நேரடியாக தொலைக்காட்சியில் பார்த்துள்ளார் முன்னாள் முதல்வர் ஜெயலலிதா.
ஜெயலலிதா இருப்பது விஐபிகளுக்கான சிறை என்பதால், அவரது கோரிக்கையை ஏற்று எல்சிடி டிவி, பிரிட்ஜ் போன்ற வசதிகளை கர்நாடக சிறைத்துறை அதிகாரிகள் செய்து கொடுத்துள்ளனர். அவரது அறையிலுள்ள கதவு, ஜன்னல்களுக்கு திரைச்சீலை போடப்பட்டு வெளியில் இருந்து யாரும் ஜெயலலிதாவை பார்க்க முடியாதபடி வசதி செய்து கொடுக்கப்பட்டுள்ளது. ஜெயலலிதாவுக்காக, அவர் தங்கியுள்ள செல் முற்றிலும் நவீனமாக்கப்பட்டுள்ளது. வாஷ் பேசின், மேற்கத்திய ஸ்டைல் கழிவறை போன்றவை அமைக்கப்பட்டதாக கூறுகின்றனர் போலீஸ் அதிகாரிகள். பரப்பன அக்ரஹாராவில் மூத்த பெண் அதிகாரி இல்லாத காரணத்தால் மைசூர் மத்திய சிறையில் இருந்து பெண் அதிகாரியை 24 மணி நேர பாதுகாப்புக்காக பெங்களூர் அழைத்து வந்துள்ளது சிறை நிர்வாகம். ஜெயலலிதா இசெட் பிளஸ் பாதுகாப்பு வளையத்தில் இருப்பதால், இன்ஸ்பெக்டர்களுக்கு கீழ் அதிகாரத்திலுள்ள போலீஸ் அதிகாரிகள் ஜெயலலிதா இருக்கும் செல் பக்கம் போக வேண்டும் என்றால்கூட சிறையின் தலைமை கண்காணிப்பாளர் அல்லது சிறைத்துறை டிஐஜி அனுமதி அவசியம். ஜெயலலிதா குறித்த தகவல்களை அவ்வப்போது மீடியாக்களுக்கு கசியவிடாமல் இருப்பதற்காக, சிறைக்குள் பணியாற்றும் போலீசார் செல்போன்கள் அனைத்தும் சுவிட்ச் ஆப் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதனிடையே பன்னீர்செல்வம் தலைமையிலான அமைச்சரவை பதவியேற்றதை சிறையிலுள்ள தொலைக்காட்சி மூலமாக ஜெயலலிதா பார்த்ததாக சிறைத்துறை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
சென்னை: முதல்வராக ஓ.பன்னீர்செல்வம் தேர்வு செய்யப்பட்டு நிலையில் ஜெயலலிதாவின் கடைசி அமைச்சரவையில் இருந்தவர்களே மீண்டும் அமைச்சர்களாகியுள்ளனர். அவர்களது இலாகாக்கள் எதுவும் மாற்றப்படவும் இல்லை. இதன்படி, அமைச்சர்களும் அவர்களின் துறைகளும் விவரம்:
ஓ.பன்னீர் செல்வம் – முதல்வர், நிதியமைச்சர், பொதுப்பணித்துறை நத்தம் ஆர்.விஸ்வநாதன்-மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை. ஆர்.வைத்திலிங்கம்–வீட்டு வசதி, குடிசை மாற்று வாரியம், நகர்ப்புற வளர்ச்சி மற்றும் சென்னை பெருநகர வளர்ச்சி ஆணையம். எடப்பாடி கே.பழனிசாமி-நெடுஞ்சாலைகள் மற்றும் சிறுதுறைமுகங்கள் துறை. பி.மோகன்-ஊரக தொழில்கள் துறை, தொழிலாளர் நலத் துறை, வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சித் துறை.
பா.வளர்மதி-சமூக நலம் மற்றும் சத்துணவு திட்டத் துறை, மாற்றுத் திறனாளிகள் நலத் துறை. பி.பழனியப்பன்-உயர்கல்வித் துறை. செல்லூர் கே.ராஜூ-கூட்டுறவு மற்றும் முன்னாள் படைவீரர்கள் நலத் துறை. ஆர்.காமராஜ்-உணவு, நுகர்வோர் பாதுகாப்புத் துறை. பி.தங்கமணி-தொழில் துறை. வி.செந்தில்பாலாஜி-போக்குவரத்துத் துறை. எம்.சி.சம்பத்-வணிகவரிகள் மற்றும் பதிவுத் துறை. அக்ரி எஸ்.எஸ்.கிருஷ்ணமூர்த்தி-வேளாண்மைத் துறை. எஸ்.பி.வேலுமணி-நகராட்சி நிர்வாகம், ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை, சட்டம், நீதிமன்றங்கள், சிறைகள், பணியாளர் மற்றும் நிர்வாகச் சீர்திருத்தத் துறை, ஊழல் தடுப்பு. டி.கே.எம்.சின்னையா-கால்நடைத் துறை.
எஸ்.கோகுல இந்திரா-கைத்தறி மற்றும் துணிநூல் துறை. எஸ்.சுந்தரராஜ்-இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை. பி.செந்தூர் பாண்டியன்-இந்து சமயம் மற்றும் அறநிலையங்கள் துறை. எஸ்.பி.சண்முகநாதன்-சுற்றுலா மற்றும் சுற்றுலா மேம்பாட்டுக் கழகம். என்.சுப்ரமணியன்-ஆதிதிராவிடர் நலத் துறை. கே.ஏ.ஜெயபால்-மீன்வளத் துறை. முக்கூர் என்.சுப்பிரமணியன்-தகவல் தொழில்நுட்பத் துறை. ஆர்.பி.உதயகுமார்-வருவாய்த் துறை. கே.டி.ராஜேந்திர பாலாஜி-செய்தி மற்றும் விளம்பரத் துறை, சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை. பி.வி.ரமணா – பால்வளத் துறை. கே.சி.வீரமணி-பள்ளிக் கல்வித் துறை.
எம்.எஸ்.எம்.ஆனந்தன்-வனத் துறை. தோப்பு என்.டி.வெங்கடாச்சலம்-சுற்றுச்சூழல் மற்றும் மாசு கட்டுப்பாட்டுத் துறை. டி.பி.பூனாட்சி-காதி மற்றும் கிராம தொழில்கள் வாரியம். எஸ்.அப்துல் ரஹீம்-பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத் துறை. சி.விஜயபாஸ்கர்-சுகாதாரத் துறை Topics: cabinet, department, தமிழக அமைச்சர்கள், துறைகள், பொறுப்புகள்