சிலந்தி வலையை சற்று உற்று நோக்கிப் பாருங்கள், அதன் குறிப்பிட்ட இயல்புகளை உங்களால் அறிந்து கொள்ள முடியும்.
அது அடிக்கும் காற்றிலும் நிலையாகத் தான் இருக்கிறது. அத்துடன் அதை தனித்தனியாக பிரித்தெடுப்பதுவும் இலகுவான காரியமல்ல.
அதில் அகப்படும் பூச்சி கூட எளிதாக தப்பித்துவிட முடியாது. பூச்சிகளை மட்டும் அதே ஒட்டும் தன்மையுள்ள பதார்த்தம் தான், வலையில்லுள்ள இழு விசையை பேணுவதிலும் உதவுகின்றது.
தற்போது விஞ்ஞானிகள் சிலந்தி வலையின் தன்மைகளைக் கொண்ட ஒரு திரவ வடத்தினை பயன்படுத்தி அதே போன்ற பல வலைகளை ஆக்கும் வழியைக் கண்டுபிடித்துள்ளனர்.
சிலந்தி வலைகள் ஏன் அடிக்கும் காற்றிலும் தொய்வுறுவதில்லை? இது அது கொண்டுள்ள Gossamer நார்களாலாகும். இந் நார்கள் இழைகளில் நீட்சி ஏற்படுமிடத்து அதனை நிவர்த்தி செய்கிறது.
லண்டன் Oxford பல்கலைக்கழக விஞ்ஞானிகளும், பிரான்ஸ் Pierre et Marie Curie பல்கலைக்கழக விஞ்ஞானிகளும் இணைந்து இந்நார்களின் தன்மையைக் கொண்ட திரவத்தை கண்டுபிடித்துள்ளனர்.
இப்பதார்த்தம் சிலந்தி வலையின் இயல்புகளை முற்றிலும் கொண்டுள்ளது, இதனை திண்மங்கள் போன்று விரிவாக்கவும் முடியும், திரவங்களை போன்று அமுக்கவும் முடியும்.
இக்கண்டுபிடிப்பானது பிற்காலத்தில் பல நுண்ணிய வடிவமைப்புக்களில் பெரிதளவில் பயன்படுத்தப்பட முடியும் என மேற்படி ஆய்வுக் குழு கூறுகின்றது.