அஜித்தின் நேர்கொண்ட பார்வை படம் ஹிந்தியில் வெளியான பிங்க் படத்தின் ரீமேக். அமிதாப் பச்சனுக்கு அதிக காட்சிகள் இல்லையென்றாலும் கடைசியில் அவரது காட்சி வெயிட்டாக இருக்கும்.
ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களுக்காக கதையில் சில மாற்றங்கள் செய்துள்ளனர், அஜித்துக்கும் அதிக காட்சிகள் உள்ளதாம். முக்கியமாக நீதிமன்ற காட்சி குறித்து பிரபலங்கள் கூறும் விஷயத்தை கேட்டு ரசிகர்களும் படு ஆவலாக உள்ளனர்.
இந்த படத்தில் அஜித்தின் காஸ்டியூம் டிசைனரான பூர்ணிமா ஒரு பேட்டி கொடுத்துள்ளார். அதில், அஜித்தின் நீதிமன்ற காட்சி எல்லாம் பார்க்கும் வாய்ப்பு கிடைத்தது, அருமையாக நடித்துள்ளார்.
படத்தில் கமிட்டானேன் என்றதும் என்னுடைய சமூக வலைதளத்திற்கு அஜித் ரசிகர்களால், பாராட்டுக்கள் வந்தது. பின் சில மிரட்டல்களும் வந்தது. இதுகுறித்து அஜித்திடம் கூறியதும் அவர் அதெல்லாம் ஒன்றும் இல்லை, நீங்கள் பொருமையாக உங்கள் வேலையை செய்யுங்கள் என்று ஆறுதல் படுத்தியதாக பேசியுள்ளார்.