விமானங்களில் காணப்படும் சில்லுகள் இயங்காவிட்டால் அவ் விமானங்கள் விபத்துக்குள்ளாவதை தடுக்க முடியாது. அப்படியான துர்ப்பாக்கிய சம்பவம் ஒன்று இந்தோனேசியாவில் இடம்பெற்றுள்ளது.
இரு தினங்களுக்கு முன்னர் 14 தொன் பொருட்களை ஏற்றிக்கொண்டு சென்றுள்ள சரக்கு விமானம் ஓடு பாதையை அண்மித்ததும் சில்லுகளை வெளியேற்ற முடியாமல் திணறியுள்ளது.
செய்வதறியாது திகைத்த விமானி தொடர்ந்து ஓடு பாதையில் விமானத்தை செலுத்தியுள்ளார். இதன்போது விமானத்தின் உடல் தரையில் தேய்ந்தவாறு பயணிக்க அவ்விடம் முழுவதும் புகை மண்டலமாக மாறியுள்ளது. இதன்போது சிறிதளவு சேதமும் விமானத்திற்கு உண்டாகியுள்ளது.