7ம் அறிவு உண்மையில் தென்னிந்திய சினிமா வரலாற்றில் சிறந்த ஓர் திரைப்படம்.
போதிதர்மன் என்ற தமிழனை பற்றிய பல வரலாற்று உண்மைகளை தெளிவுபடுத்தியது.
ஆனால் அந்த போதிதர்மன் போன்றே மற்றுமொரு தமிழ்துறவி சீனர்களால் இன்றளவும் வணங்கப்பட்டுவருவது நம்மில் எத்தனைபேருக்கு தெரியும்.
இந்தியாவில் பிறந்த “போகர் சித்தர்” பழனி முருகன் சிலையை உருவாக்கிய பெருமையையும் தன்னகத்தே கொண்டவர்.
பழனி முருகன் சிலையை உருவாக்கி பின் சைவ சமய கருத்துக்களையும் சில போதனைகளையும் பரப்ப சீனா உட்பட பல நாடுகளுக்கு பயணம் செய்தார்.
குறிப்பாக சீனாவில் தங்கியிருந்து சில ஆண்டுகள் ஆன்மீக சேவையாற்றினார்.
சீனாவில் “Lao-Tzu”என்ற பெயரில் அறியபட்ட போகர் சித்தர் ஜென் தத்துவம் போன்று Taoism (தாவோயிசம்) என்ற தத்துவயியலை உருவாக்கினார்.
குறித்த தத்துவயியல் இன்றும் சீனாவில் மிகபிரபலம்.தனக்கு தெரிந்த சித்தவைத்தியங்களை சீனர்களுக்கு கற்றுகொடுத்தபின் இவர் தனதுதாய்நாட்டிற்கே திரும்பினார்.
போதிதர்மன் போன்றே இவரும் “தாமோ,போதிதர்மர்,டாவோ-ட்சு”போன்ற பெயர்களாலும் அழைக்கப்பட்டுவந்தார்.
இருந்தும் இது போன்ற வரலாற்று தகவல்கள் தமிழர்களின் கல்வியியலில் இடம்பெறுவதில்லை.
தமிழ் தான் பெரிது தமிழர்கள் தான் வரலாற்றுநாயகர்கள் என்ற கருத்தை நான் கூறமுற்படவில்லை.
ஆனால் தமிழன் அறிவியல் ரீதியாகவும், வரலாற்று ரீதியாகவும் நிறைய சாதனைகளை நிகழ்த்தியுள்ளான். அவற்றை நாம் மறந்துவிடக்கூடாது என்பதே ஆழமான உண்மை.