சீன அதிபர் போன்று தோற்றமளிக்கும் இறைச்சி உணவு வியாபாரி

493

சீன அதிபரை போன்று தோற்றமளிக்கும் இறைச்சி உணவு வியாபாரி இன்டர்நெட் மூலம் பிரபலமானார்.

சீனாவில் உள்ள ஹூனான் நகரை சேர்ந்தவர் ஷாவோ ஜியான்ஹூவா. இவர் ஹூனான் பல்கலைக்கழக மாணவர் விடுதி அருகே இறைச்சி உணவு கடை நடத்தி வருகிறார்.

சில நாட்களாக இவரது கடை முன்பு ‘கியூ’ வரிசையில் நின்று மக்கள் உணவு பொருட்களை வாங்கி செல்கின்றனர். இது அவருக்கே ஒரு இன்ப அதிர்ச்சியாக இருந்தது.

அவரது உணவின் சுவை காரணமாக கூட்டம் அலை மோதவில்லை. இவர் அச்சு அசலாக சீன அதிபர் ஸி ஜின்பிங் போன்ற தோற்றத்தில் இருக்கிறார். சமீபத்தில் இவரது போட்டோ இன்டர்நெட்டில் வெளியானது.

அதை தொடர்ந்து அதிபரை போன்று தோற்றமுடைய ஷா ஜியான் குவாவை பார்க்க தான் கூட்டம் அலை மோத தொடங்கியது. நாள் ஒன்றுக்கு இவர் 1600 பிளேட் இறைச்சி உணவு தயாரித்து விற்பனை செய்கிறார்.

SHARE