அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் சீன பொருட்களுக்கான வரியை ஜனாதிபதி டிரம்ப் பன்மடங்கு உயர்த்தினார்.
அதற்கு பதிலடியாக சீனாவும் அமெரிக்க பொருட்களுக்கு கூடுதல் வரி விதித்துள்ளது.
இதனால் உலகின் இரு பெரும் பொருளாதார நாடுகளுக்கு இடையே கடந்த ஆண்டு மத்தியில் வர்த்தக போர் உருவானது.
அதன்பின்னர் அமெரிக்க ஜனாதிபதி டிரம்பும், சீன அதிபர் ஜின்பிங்கும் சந்தித்து பேசி இந்த வர்த்தக போரை தற்காலிகமாக நிறுத்திவைக்க முடிவு செய்துள்ளனர்.