சீமேந்து மூட்டையொன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சீமேந்து நிறுவனம் தெரிவித்துள்ளது.
சீமேந்து மூட்டையொன்றின் விலையை அதிகரிக்குமாறு இலங்கை சீமேந்து நிறுவனம் ஒன்றை கோரிக்கை ஒன்றை விடுத்திருந்த்து.
இதனையடுத்து, நுகர்வோர் விவகார அதிகார சபை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, சீமேந்து மூட்டையொன்றின் புதிய விலை ஆயிரத்து 95 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சீமேந்து நிறுவனம் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.