சீரடிசாய்பாபா கோவிலில் அஜீத் வழிபாடு

714

 

 வீரம் படத்தை தொடர்ந்து கவுதம்மேனன் இயக்கும் படத்தில் அஜீத் நடக்கிறார். இதற்கு இன்னும் தலைப்பு வைக்கவில்லை. ஆயிரம் தோட்டாக்கள், துடிக்குது புஜம் போன்ற பெயர்களை பரிசீலிப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இதில் அஜீத் ஜோடியாக அனுஷ்கா நடிக்கிறார். படப்பிடிப்பு துவங்கியுள்ளது. ஆக்ஷன் படமாக தயாராகிறது.
‘நாலு நாள்ல ஊரே கிறிஸ்துமஸ் கொண்டாடும் எனக்கு மட்டும் அன்னைக்கு தீபாவளிடா’ என்று அஜீத் பேசும் பஞ்ச் வசனம் படத்தில் உள்ளது. படப்பிடிப்புக்காக புனே சென்ற போதுதான் அஜீத் சீரடிசாய்பாபா கோவிலுக்கு போனதாக தகவல் வெளியாகியுள்ளது. தனது பிறந்த நாளையொட்டி அந்த கோவிலுக்கு போய் சாமி கும்பிட்டுள்ளார். சிறப்பு பிரார்த்தனையிலும் ஈடுபட்டார். நீண்ட நேரம் கோவிலில் உட்கார்ந்து இருந்தார்.

தியானம் செய்தார். பிறகு அங்கிருந்து புறப்பட்டு சென்றார். தயாரிப்பாளர் ஏ.எம்.ரத்னம் சென்னை சாலிகிராமத்தில் சாய்பாபா கோவில் கட்டி உள்ளார். அங்கு அஜீத் அடிக்கடி போவது உண்டு. அதன் மூலம் சாய்பாபா பக்தராக மாறினார். இதை தொடர்ந்து தற்போது சீரடிசாய்பாபா கோவிலுக்கும் சென்றுள்ளார்.

SHARE